பாரதி கண்ணம்மா சீரியல் நடிகரின் மனைவி மரணம்! சின்னத்திரையினர் இரங்கல்!
நடிகர் பரத் கல்யாண் தமிழ் ,தெலுங்கு ,கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வரும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார்.இவருடைய தந்தை மறைந்த முன்னணி நடிகர் கல்யாண் குமார் ஆவார்.பரத் கல்யாண் பிரியதர்ஷினி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவருடைய திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சின்ன திரையில் நடித்து வருகிறார்.மேலும் இவர் சின்னத்திரை மட்டுமின்றி யாக்கா ,சிருங்காரம்,பாட்டாளி ஞாபகம்,சுள்ளான் உள்ளிட்ட சில திரைப்படங்கள் நடித்துள்ளார்.
மேலும் இவர் அண்மையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இவருடைய மனைவி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.இன்று அதிகாலை அவருடைய மனைவி திடீர் என உயிரிழந்தார்.
பரத் கல்யாண் மனைவி மரணத்திற்கு சின்னத்திரை நடிகர்கள் பலரும் இரங்கலையும் ,ஆறுதலையும் தெரிவித்து வருகின்றனர்.இந்த செய்தி சின்னத்திரையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இரண்டு குழந்தைகள் தாய் இன்றி தவிக்கும் நிலை ஏற்ப்பட்டுள்ளது.