பள்ளிகளுக்கு மாணவர்களுக்கு சைக்கிள்..கல்லூரிகளுக்கு ஸ்கூட்டி! பாஜக வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Photo of author

By Rupa

பள்ளிகளுக்கு மாணவர்களுக்கு சைக்கிள்..கல்லூரிகளுக்கு ஸ்கூட்டி! பாஜக வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Rupa

Bicycle for students to schools.Scooty for colleges! Sudden announcement made by BJP!

பள்ளிகளுக்கு மாணவர்களுக்கு சைக்கிள்..கல்லூரிகளுக்கு ஸ்கூட்டி! பாஜக வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

டிசம்பர்மாதம் 12ஆம் தேதி இமாச்சலப் பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.மொத்தம் 68 தொகுதிகள் உள்ளன. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் இவ்வேளையில் கட்சிகளுக்கு இடையே அனல் பறக்கும் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கட்சியும் ஆட்சிக்கு வந்தால் நாங்கள் இதை செய்வோம் என பல இலவசங்களை கூறி ,மக்களின் ஆசையை தூண்டி வருகின்றனர்.

மாநிலங்கள் தரும் இலவசங்களால் தான் இந்தியா பொருளாதாரத்தில் கடும் வீழ்ச்சி அடைகிறது என்று பிரதமர் மோடி பேசி வருகிறார். ஆனால் அவரது கட்சியோ, இமாச்சல பிரதேசத்தில் பிரச்சாரத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு பள்ளி படிக்கும் பருவத்தில் மிதிவண்டியும், அதே உயர்கல்வி படிக்கும் பொழுது ஸ்கூட்டியும்  வழங்குவதாக கூறியுள்ளனர்.

மாநிலங்களின் இலவசங்கள் தான் பொருளாதாரத்தை வீழ்ச்சியடைய செய்கிறது என்று கூறிய இவர்களே மக்கள் ஓட்டுக்களை கவர எண்ணற்ற இலவசங்களை கூறி வருகின்றனர். இது நியாயமா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.இந்நிலையில் பிரபல செய்தி நிறுவனமானது ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியது.

அதில் பாஜக 37 முதல் 45 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கூறியுள்ளனர். இதில் வருத்தத்திற்குரிய தகவல் என்னவென்றால் ஆம் ஆத்மிக்கு ஓர் இடம் கூட கிடைக்காது என்று கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. இதே காங்கிரஸுக்கு 29 தொகுதிகள் வரை வெற்றி அடையும் என்று கூறுகின்றனர்.