ஸ்டாலின் கனவுக்கு வேட்டு வைத்த முதல்வர்!

Photo of author

By Sakthi

ஸ்டாலின் கனவுக்கு வேட்டு வைத்த முதல்வர்!

Sakthi

தமிழக கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய நகை கடன் மற்றும் 6 சவரன் வரையில் அடகு வைத்த நகை கடன் அதோடு மகளிர் சுய உதவி குழு கடன் ஆகியவற்றை தள்ளுபடி செய்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

சட்டசபை தேர்தல் விரைவில் வரவிருக்கும் நிலையில், முதலமைச்சர் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை குஷிப்படுத்தும் விதமாக பற்பல அறிவிப்புகளை வெளியிட்டு வெட்டுகின்றார் . அந்த வகையில், விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று ஒரு அறிவிப்பை முன்னர் வெளியிட்டார். அதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

அதுபோல விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் கொடுக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார் .இந்த நிலையில், சட்டசபை விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அதுதான் நகை கடன் தள்ளுபடி என்ற அறிவிப்பு .அதேபோல மகளிர் சுய உதவி குழு கடன் வாங்கியவர்களின் கடனும் தள்ளுபடி என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார்.

இதன் காரணமாக, தமிழக மக்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட போது திமுக ஆட்சிக்கு வந்தால் நகை கடன் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன் போன்றவை ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் அவர் அப்படி அறிவித்திருந்த நிலையில், முதல்வர் இவ்வாறு ஒரு அறிவிப்பை வெளியிட்டு ஸ்டாலினை திகைப்பிற்கு உள்ளாக்கி இருக்கிறார்.