ஜடேஜா மற்றும் அஸ்வினை சமாளிப்பது பெரிய சவால்! ரோகித் சர்மா பேட்டி! 

0
272
#image_title

ஜடேஜா மற்றும் அஸ்வினை சமாளிப்பது பெரிய சவால்! ரோகித் சர்மா பேட்டி! 

நாக்பூர் டெஸ்டில் வெற்றிக்கு பின் ஜடேஜா மற்றும் அஸ்வினை பற்றி கேப்டன் ரோகித் சர்மா செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 9-ஆம் தேதி நாக்பூரில் தொடங்கியது. இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 177 ரன்களும் இந்திய அணி 400 ரண்களும் எடுத்தது.

அடுத்து 223 ரன்கள் பின் தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 91 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த இரண்டு போட்டிகளிலும் அஸ்வின் 8 விக்கெட்டுகளையும், ஜடேஜா 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர். அணியின் வெற்றிக்கு பிறகு ஜடேஜா மற்றும் அஸ்வினின் செயல்பாடு குறித்து ரோகித் சர்மா செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார் அதில் அவர் கூறியதாவது,

அணியில் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பதும் அவர்கள் மிகவும் திறமையாக செயல்படுவதும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. ஜடேஜா 249 விக்கெட்டுகளில் இருப்பதால் பந்தை என்னிடம் கொடு என்று கேட்டார். அதேபோல் அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருப்பதால் வந்து எனக்கு கொடு என்று கேட்டார். ஆட்டத்தை விட இவர்களை சமாளிப்பது தான் பெரிய சவாலாக எனக்கு இருந்தது என்று சிரிப்புடன் கூறினார்.

சாதனைகள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் அவர்கள் இருவரும் அவர்களது சாதனைகளை பற்றி நன்றாக தெரிந்து வைத்துள்ளனர் என்று அவர் கூறினார்.

Previous articleவிஜய் அஜித்துக்கு போட்டியாக களமிறங்கும் வாத்தி!  வசூலில் அடி பின்னுவாரா? 
Next articleஎதிர்பார்ப்பை அதிகமா வச்சுக்கோங்க! வெளிவந்த லியோ படத்தின் ஸ்கிரிப்ட் !