இன்று பலரது வீடுகளில் பிரிட்ஜ் பயன்படுத்தப்படுகிறது.உணவுப் பொருட்கள் விரைவில் அழுகி போகாமல் இருக்க பிரிட்ஜ் வாங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்த கலாம் மாறி தற்பொழுது மீதமான உணவுகளை சேமிக்க பயன்படுத்தப்படுகிறது.காய்கறிகளை நறுக்கி ஸ்டோர் செய்து வைப்பது,ஒரு மாதத்திற்கு தேவையான இஞ்சி பூண்டு விழுதை சேமிப்பது போன்ற பழக்கம் அதிகரித்து வருகிறது.
இவ்வாறு பதப்படுத்தி உண்ணும் உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தும் சில உணவுகள் நஞ்சாக மாறவும் வாய்ப்பிருக்கிறது.
1)தக்காளி
பொதுவாக அனைவரது பிரிட்ஜிலும் தக்காளி பழம் ஸ்டோர் செய்து பயன்படுத்தப்படுவது வழக்கம்.ஆனால் பிரிட்ஜில் வைத்த தக்காளி பழம் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்ககூடும்.
2)உருளைக்கிழங்கு
அனைவருக்கும் பிடித்த உணவுப் பொருட்களில் ஒன்று உருளைக்கிழங்கு.இதை பிரிட்ஜில் வைக்கும் போது அதன் மாவுச்சத்து சர்க்கரை சத்தாக மாறி உடல் ஆரோக்கியத்தை பாதித்துவிடும்.
3)வெங்காயம்
பிரிட்ஜில் வைக்கப்பட்ட வெங்காயத்தை பயன்படுத்தினால் அது ஆரோக்கியத்தை பாதித்துவிடும்.
5)பூண்டு
பெருமபாலானோருக்கு தோல் நீக்கிய பூண்டை பிரிட்ஜில் சேமித்து வைத்து பயன்படுத்தும் பழக்கம் இருக்கும்.சிலர் பூண்டை அரைத்து ஸ்டோர் செய்து பயன்படுத்துவார்கள்.இதனால் பூண்டின் இயற்கை சுவை குறைவதோடு உடல் ஆரோக்கியமும் பாதித்துவிடும்.
6)தேன்
உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த தேனை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தினால் அதன் நன்மைகள் நீங்கிவிடும்.
7)வாழைப்பழம்
உங்களில் பலருக்கு வாழைப்பழத்தை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தும் பழக்கம் இருக்கும்.இதனால் உடல் ஆரோக்கியம் பாதிக்க வாய்ப்பிருக்கிறது.