பெரும் ஆபத்து.. குப்புற படுத்து தூங்கினால் கட்டாயம் இந்த பாதிப்பு வரும்!! 

Photo of author

By Divya

பெரும் ஆபத்து.. குப்புற படுத்து தூங்கினால் கட்டாயம் இந்த பாதிப்பு வரும்!!

உடல் சீராக இயங்க ஆரோக்கியமான உணவு மட்டுமல்ல நிம்மதியான தூக்கமும் அவசியமாகும்.உங்களால் நிம்மதியான தூக்கத்தை அனுபவிக்க முடியவில்லை என்றால் அதிகப்படியான மன அழுத்தம்,உடல் நலக் கோளாறு போன்றவற்றால் அவதியடைய வேண்டியிருக்கும்.

நல்ல நிம்மதியான தூக்கத்தை அனுபவித்தால் மட்டுமே உடல் புத்துணர்ச்சியுடன் ஆரோக்கியமாக இருக்கும்.ஒருவர் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக புத்துணர்ச்சியுடன் இருக்க குறைந்தது 8 மணி நேர தூக்கம் அவசியமான ஒன்றாகிறது.சிலர் நீண்ட நேரம் தூங்கினாலும் அவர்களால் புத்துணர்ச்சியாக இருக்க முடியாது.இதற்கு முக்கிய காரணம் அவர்களது தூக்கம் சரியானதாக இருக்காது.சிலருக்கு குப்புற படுத்தால் மட்டுமே தூக்கம் வரும்.அப்படி தூங்க விரும்புபவர்கள் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

ஆகவே ஒருவர் குப்புற படுத்து உறங்கினால் எந்த மாதிரியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதை அறிந்து கொள்வது அவசியமாகும்.

குப்புறப்படுத்து உறங்குவதால் ஏற்படும் பாதிப்புகள்:

1)குப்புறப்படுத்து உறங்கினால் மார்பு பகுதியில் அழுத்தம் ஏற்பட்டு அவ்விடத்தில் கடுமையான வலி உண்டாகும்.

2)குப்புறப்படுத்து உறங்குவதால் முகத்திற்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் முகச் சுருக்கம்,முக பருக்கள் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.இதனால் முக அழகு பாதிக்கும் சூழல் ஏற்படுகிறது.

3)கர்ப்ப காலத்தில் பெண்கள் குப்புற படுத்து தூங்கினால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும்.

4)குப்புறப்படுத்து உறங்குவதால் வயிறு அழுத்தம் ஏற்படுகிறது.இதனால் வயிறு தொடர்பான பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.

5)தொடர்ந்து குப்புறப்படுத்து உறங்கி வந்தால் முதுகு வலி ஏற்படும்.அது மட்டுமின்றி சுவாசப் பிரச்சனை ஏற்படும்.