பெரும் ஆபத்து.. காலை நேரத்தில் இந்த உணவுகளை பெண்கள் அறவே தவிர்க்க வேண்டும்!! 

0
165
Big danger.. Women should avoid these foods in the morning!!
Big danger.. Women should avoid these foods in the morning!!

காலை உணவு உங்களை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது.உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அவசியம் உண்ண வேண்டும்.

இன்றைய காலத்தில் காலை உணவு உட்கொள்ள வேண்டும் என்பதை பலரும் மறந்து விடுகின்றனர்.உரிய நேரத்தில் உணவருந்தாமல் அலட்சியம் கொள்வதால் பல்வேறு உடல் உபாதைகளை சந்திக்க நேரிடுகிறது.சிலர் சர்க்கரை,கொழுப்பு,அதிக கலோரிகள் நிறைந்த காலை உணவை எடுத்துக் கொள்கின்றனர்.இதுபோன்ற உணவுகள் உடல் ஆரோக்கியத்தை பாதிப்பதோடு உடலை மந்தப்படுத்துகிறது.

குறிப்பாக பெண்கள் காலை நேரத்தில் சில உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டுமென்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

1)சர்க்கரை உணவு

காலை நேரத்தில் இனிப்பு கலந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.பிஸ்கட்,ஸ்வீட்ஸ் போன்ற இனிப்பு கலந்த பொருட்களை சாப்பிடாமல் நார்ச்சத்து நிறைந்த உணவுகள் மற்றும் முழு தானிய உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

2)எண்ணெய் இல்லாத உணவுகள்

காலை நேர உணவுகள் ஆரோக்யமானதாக இருக்க வேண்டும்.ஆதலால் எண்ணெய் நிறைந்த உணவுகள்,பதப்படுத்தபட்ட உணவுகள்,வறுத்த உணவுகளை முழுமையாக தவிர்க்க வேண்டும்.

3)தயிர்

காலை நேரத்தில் தயிர் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு எதிர்மறை பாதிப்புகளை ஏற்படுத்தும்.

4)மைதா உணவுகள்

காலை நேரத்தில் மைதாவால் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடவே கூடாது.இதனால் செரிமானக் கோளாறு,மலச்சிக்கல்,வயிறு தொடர்பான பாதிப்புகள் ஏற்படக் கூடும்.

5)சிட்ரஸ் பழங்கள்

காலையில் வெறும் வயிற்றில் சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவதால் நெஞ்செரிச்சல்,வாயுத் தொல்லை,வயிறு எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படக் கூடும்.