தொடங்கவிருக்கும் “பிக் பாஸ் 7” நிகழ்ச்சி!! முதல் போட்டியாளர் இவர் தான்!!

0
148
"Bigg Boss 7" is about to start!! He is the first contestant!!
"Bigg Boss 7" is about to start!! He is the first contestant!!

தொடங்கவிருக்கும் “பிக் பாஸ் 7” நிகழ்ச்சி!! முதல் போட்டியாளர் இவர் தான்!!

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சி தான் இந்த பிக் பாஸ். இதனை விஜய் தொலைக்காட்சி ஒலிபரப்பு செய்து கொண்டு வருகின்றது. இதற்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருகின்றது.

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல் அவர்கள் தொகுப்பாளராக உள்ளார். இந்த நிகழ்ச்சிக்காக கமல் அவர்களுக்கு படத்தை விட தொகுப்பாளர் பணிக்கே அதிக சம்பளம் வழங்கப்படுவதாக கூறப்படுகின்றது.

பிக் பாஸ் நிகழ்ச்சியானது கடந்த 6 சீசன்களாக நடைபெற்று வந்த நிலையில் இப்பொழுது 7 வது சீசன் தொடங்க இருக்கின்றது.இந்த நிகழ்ச்சி இரவு  9.30 மணிக்கு தொடங்க இருக்கும் நிலையில் இதற்கென்று ஒரு ரசிகர் கூட்டமே உள்ளது.

தற்பொழுது பிக் பாஸ் சீசன் 7 தொடங்க உள்ள நிலையில் இதன் போட்டியாளர்கள் யாராக இருப்பார்கள் என்று ரசிகர்களிடையே எதிர் பார்ப்புகள் அதிகரித்து கொண்டே செல்கின்றது.

அந்த நிலையில் இதன் முதல் போட்டியாளர் குறித்த முக்கிய தகவல் வெளியாகி இருக்கின்றது. இந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சின் முதல் போட்டியாளர் கோயம்புத்தூரை சேர்ந்த பெண் ஓட்டுனர் ஷர்மிளா என்று தகவல் வெளியாகி உள்ளது.

பெண் ஓட்டுனர் ஷர்மிளா இன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் மிகவும் பிரபலமாக பேசப்படுகின்றவர். அவர் சில நாட்களுக்கு முன் தனியார் பேருந்தில் நிகழ்ந்த பிரச்னையின் காரணமாக அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து நடிகர் கமல் கார் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார் அத்துடன் 3 லட்சம் மதிப்பிலான தொகையும் தனது அலுவலகத்தில் அழைத்து கொடுத்தார்.

இதில் பெண் ஓட்டுனர் ஷர்மிளா அவர்கள் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்வது குறித்து பேச பட்டிருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.இது குறித்து உண்மையான தகவல் விரைவில்  வெளியாகும் என்று ரசிகர்கள் எதிபார்க்கப்படுகிறது.

Previous articleதிருமணம் ஆகாதவரா நீங்கள்? இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!
Next articleமக்களே உஷார் !! இந்த மாவட்டங்களில் இன்று மிகக்கன மழை!!