பிக்பாஸ் 8-வது சீசன் நிகழ்ச்சி பிரபலம் தூக்குபோட்டு தற்கொலை!!

Photo of author

By Vinoth

சென்னை: பிக்பாஸ் எட்டாவது  சீசனில் பணிபுரிந்த அசோசியேட் இயக்குநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தற்போது  50 நாட்களைக் கடந்து வருகிறது. இந்த சீசன் ஆரம்பம் முதலே சலிப்பை ஏற்படுத்தும் விதமாக இருப்பதாக இணையத்தில் வைரலகி வருகின்றனர். இதில் கடந்த வாரம் வைல்ட் கார்டு எண்ட்ரியாக நுழைந்த சிவகுமார் வெளியேற்றப்பட்டிருக்கிறார். ஆண்கள் vs பெண்கள் என இருந்த டீமும் கலைக்கப்பட்டு தற்போது எல்லோரும் தனிப்பட்ட முறையில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

சில வாரங்கள் சுவாரஸ்யம் இல்லாமல் சென்ற பிக்பாஸ் நிகழ்ச்சி, வைல்டு கார்டு என்ட்ரிக்க பின்னர் பரபரப்பின் உச்சத்திற்கு சென்றது. மேலும் பிக்பாஸ் ரசிகர்களுக்கு ஏற்ற போல் விஷால் – தர்ஷிகா காதல் ஜோடிகளும் பிக்பாஸ் நிகழ்ச்சியை மெருகேற்றி வருகிறார்கள். ஆனால் பிக்பாஸ் கன்டென்ட் காதலா? அல்ல ரியல் காதலா? என்பது பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததற்கு பின்னரே தெரியவரும்.

இந்த நிலையில் பிக்பாஸ் எட்டாவது  சீசனில் அசோசியேட் இயக்குநராகப் பணிபுரிந்து வந்தவர்  ஸ்ரீதர் ஆவர். அவர்  நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த தற்கொலைக்கு என்ன காரணம் என்பதை காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.  மேலும் அவரது குடும்பத்தில் எதாவது பிரச்சனையா அல்லது கடன் தொல்லையால் இந்த முடிவை எடுத்தாரா என பல கோணங்களில் காவல் துறை விசாரனை நடத்தி வருகின்றனர். மேலும் பிக்பாஸ் குழுவில் முக்கிய நபராக இருந்த ஸ்ரீதர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.