“காவாலா” பாடலுக்கு குத்தாட்டம் போட்ட பிக் பாஸ் நடிகை!! அடேங்கப்பா தமன்னாவிற்கே டப் கொடுப்பார் போல!!

Photo of author

By CineDesk

“காவாலா” பாடலுக்கு குத்தாட்டம் போட்ட பிக் பாஸ் நடிகை!! அடேங்கப்பா தமன்னாவிற்கே டப் கொடுப்பார் போல!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் மக்களை மிகவும் ஈர்த்த ஒரு நிகழ்ச்சி தான் பிக் பாஸ். கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் தற்போது ஆறு சீசன்கள் நிறைவு பெற்றிருக்கிறது.

அதில், ஆறாவது சீசனில் கலந்து கொண்ட இலங்கையிலிருந்து வந்த ஒரு பெண் தான் ஜனனி ஆவார். இவர் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தை வசித்து வந்தவர். முதலில் தொகுப்பாளினியாக இருந்த இவர் பிறகு பிக் பாசிற்கு வந்து பிரபலமானார்.

இவரின் நடவடிக்கைகளை ஒருசிலர் வெறுத்து வந்தாலும், ஏராளமான ரசிகர்கள் இவரை ஆதரித்து வந்தனர்.

இவரின் சிரிப்பாலும், இலங்கை தமிழாலும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வந்தார். இவருக்கென்று சமூக வலைதளங்களில் ரசிகர் பட்டாளமே உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் தற்போது சென்னையில்தான் இருந்து வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய போடோஷூட் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு வருவார்.

அந்த வகையில், தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரின் மத்தியிலும் டிரென்ட் ஆகிக் கொண்டிருக்கும் ஒரு பாடல் தான் “காவாலா”. இது ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

தற்போது இந்த காவாலா பாடலுக்கு பிக் பாஸ் ஜனனி நடனம் ஆடி உள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் தமன்னா-கே போட்டியாக வருவீர்கள் போல என்று கருத்துக்களை கூறி வருகின்றனர். இவரின் இந்த நடன வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.