பிக்பாஸ் சீசன் 5-ன் வின்னரின் புதிய படம்!! அதன் டீசர் இன்று வெளியிட்டு!!

0
81
Bigg Boss Season 5 Winner New Pic!! Its teaser released today!!
Bigg Boss Season 5 Winner New Pic!! Its teaser released today!!

சென்னை: பிக்பாஸ் சீசன் 5-ன் வின்னர் ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக புதிய படத்தில் அறிமுகம் ஆகிறார். இவர் விஜய் டிவியில் கடந்த 15 ஆண்டுகளாக சிரியல் மற்றும் ரியாலிட்டி ஷோகள் நடத்தி நடித்து வந்தார். மேலும் அவர் வாழ்கையில் வெற்றி பயணமாக பிக்பாஸ் 5 அமைந்தது. அதன் மூலம் அவர் ஒரு சில படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

மேலும் அதன் பயனாக அனுஷ்கா நடிப்பில் வெளிவந்த ‘சைஸ் ஸீரோ’ மற்றும் தேசிய விருது பெற்ற ‘பாரம்’ ஆகிய படங்களை வசனம் மற்றும் திரைகதை எழுதிய ராகவ் மிர்தாத் இயக்குனரகாக ஆகிறார். மேலும் அவர் முதல் திரைப்படம் காலங்களில் அவள் வசந்தம் எனும் படத்தை இயக்குனராக அறிமுகம் ஆனர். இந்த படத்திற்கு Bun Butter Jam என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தில் கதாநாயகனாக ராஜு ஜெயமோகன், கதாநாயகியாக ஆத்யா பிரசாத், பாவ்யா ட்ரிக்கா நடித்துள்ளனர்.

இந்தப்படத்தில் பல முக்கிய கதாப்பாத்திரத்தில் சார்லி,சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, மைக்கோல் தங்கதுரை, விஜே பப்பு நடித்துள்ளனர். பாபு ஒளிப்பதிவில், ஜான் ஆப்ரகாம் படத்தொகுப்பில் உருவாகிவரும் இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சில மாதங்க ளுக்கு முன் வெளியானது.இதை ரெயின் ஆஃப் ஆரோஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது. இந்நிலையி ல் படத்தின் டீசர் இன்று முதல் திரையரங்குகளில் ஒளிப்பரப்படும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். மேலும் இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பக்கபடுகிறது.

Previous articleவிஜய்-யை தன் பக்கம் இழுக்கும் அண்ணாமலை!! பாஜகவுடன் தவெக கூட்டணி வைக்குமா?
Next articleகுரூப் 2, 2ஏ தேர்வு முறையில் புதிய மாற்றம்!! தமிழக தேர்வாணையம் அதிரடி அறிவிப்பு!!