2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் துவங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியானது தற்பொழுது வரை வெற்றிகரமாக 8 சீசன்களை கடந்துள்ளது.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் 7 சீசன்களை நடிகர் மற்றும் தயாரிப்பாளரான கமலஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், படவேலைகளில் பிஸியாக இருந்ததால் பிக் பாஸ் சீசன் 8 மட்டும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியால் தொகுத்து வழங்கப்பட்டது. இந்த கடைசி சீசனில் வெற்றியாளராக முத்துக்குமரன் தேர்வு செய்யப்பட்டு டைட்டிலும் வென்றார்.
சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியை அம்பானியின் உடைய ஜியோ நிறுவனம் வாங்கியதை அடுத்து டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் என்பதை ஜியோ ஹாட்ஸ்டார் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு அதற்கான விளம்பரங்கள் தற்பொழுது ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. இதனை தொடர்ந்து ஏற்கனவே கலர்ஸ் தமிழ் என்ற தொலைக்காட்சியை அம்பானி குடும்பம் நடத்தி வரும் நிலையில் விஜய் தொலைக்காட்சியையும் வாங்கி இருப்பதால் பிக் பாஸ் சீசன்கள் அனைத்தும் தினமும் இரவு 7:00 மணி முதல் மறுஒளிபரப்பு கலர்ஸ் தமிழில் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வந்த படங்கள் விஜய் டிவியிலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த படங்கள் கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுவதோடு பிக் பாஸ் சீசன் 9 கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் நடைபெற அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் ஏற்கனவே இந்தி பிக் பாஸ் சீசன்கள் அனைத்தும் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாவதே ஆகும்.