நாயகனாகும் பிக்பாஸ் வின்னர் அசீம்!! முதல் படத்துக்கு இயக்குநர் இவரா!!

0
272
Bigg Boss winner Aseem is the hero!! Is he the director of the first film!!
Bigg Boss winner Aseem is the hero!! Is he the director of the first film!!
நாயகனாகும் பிக்பாஸ் வின்னர் அசீம்!! முதல் படத்துக்கு இயக்குநர் இவரா!!
கடந்த வருடம் நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் டைட்டில் வென்ற பிக்பாஸ் பிரபலம் அசீம் அவர்கள் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் பிரபல இயக்குநர் ஒருவர் இந்த படத்தை இயக்கப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவி, சன் டிவி போன்ற சேனல்களில் ஒளிபரப்பான தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த அசீம் அவர்களுக்கு பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்ட அசீம் பிரபலமான நபராகவும் டைட்டில் வின்னராகவும் மாறினார். இதையடுத்து இவர் புதிய படத்தில் காதநாயகனாக நடிக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா, எம்ஜிஆர் மகன் போன்ற படங்களை இயக்கியவர் பொன்ராம். இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான டிஎஸ்பி திரைப்படம் தோல்வியை தழுவியது. இதையடுத்து இயக்குநர் பொன்ராம் அடுத்து இயக்கப் போகும் இயக்கத்தில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் அசீம் கதாநாயகனாக நடிக்கப் போகிறார்.
பிக்பாஸ் பிரபலம் அசீம் மற்றும் இயக்குநர் பொன்ராம் இருவரும் படப்பிடிப்பிற்கான  இடங்களை தேர்வு செய்வதற்கு ராஜஸ்தான் மாநிலத்திற்கு சென்றுள்ளனர். இயக்குநர் பொன்ராம் மற்றும் பிக்பாஸ் பிரபலம் அசீம் இருவரும் ராஜஸ்தானில் இருக்கும் புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வைராலகி வருகின்றது.
Previous articleதி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தடை விதித்தது தவறு!! பிரபல இயக்குநர் பேட்டி!!
Next articleSI ஆக ஆசையா!! இன்று முதல் தமிழக அரசு புதிய அறிவிப்பு!!