SI ஆக ஆசையா!! இன்று முதல் தமிழக அரசு புதிய அறிவிப்பு!!

0
180
Want to be an SI!! Tamil Nadu government new notification from today
Want to be an SI!! Tamil Nadu government new notification from today

SI ஆக ஆசையா!! இன்று முதல் தமிழக அரசு புதிய அறிவிப்பு!!

தமிழக அரசின் முதன்மை பயிற்சி நிறுவனமான அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி, அரசுத்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு, பல நேர்முக பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

அதாவது அரசு நிறுவனங்கள் நடத்தும் தேர்வுகளை இந்த கல்லூரியான AIM TN என்றழைக்கப்படும் யூடியூப் சேனல்கள் மூலமாக இலவச இணையதள வகுப்புகளை நடத்தி வருகிறது.

இந்த நிலையில்தான் அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் போட்டி தேர்விற்காக ஒரு தனியான இலவச இணையத்தள வகுப்புகளைத் தொடங்கியுள்ளது. மேலும் இந்த தேர்விற்கான பாடத்திட்டங்கள் அனைத்து பிரிவுகளிலும் கற்பிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த இலவச இணையத்தள வகுப்பின் பெயர் “சாகசம் அறுவது” என்றும் இதில் மொத்தம் 180 பயிற்சி வீடியோக்களும் 60 நாட்களில் பதிவிறக்கம் செய்யப்படும். அதேசமயம் 20 மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படும் என்று கூறிப்பிடப்பட்டுள்ளது, இந்த தேர்வுகளுக்காக “நோக்கம்” என்ற செயலியை, கல்லூரி வெளியிட்டுள்ளது. இந்த செயலியை ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K