‘ பிரியங்கா தான் எனக்கு அக்கா’ கமலிடம் கண்ணீர் விட்ட அபிஷேக்.!! இன்றைய புரோமோ.!!

Photo of author

By Vijay

‘ பிரியங்கா தான் எனக்கு அக்கா’ கமலிடம் கண்ணீர் விட்ட அபிஷேக்.!! இன்றைய புரோமோ.!!

Vijay

ந்த வீட்டிலேயே எனக்கு பிரியங்கா வாய் தான் ரொம்ப பிடிக்கும் என அபிஷேக் அழுதுகொண்டே கூறியுள்ளார்.

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.இந்த நிகழ்ச்சி கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமாக ஆரம்பமானது.

18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் நேற்று திருநங்கை நமிதா மாரிமுத்து உடல்நலக் குறைவு காரணமாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். தற்போது பிக்பாஸ் வீட்டில் 17 போட்டியாளர்கள் உள்ளனர்.

நேற்றைய தினம், கமல் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு போட்டியாளர்கள் குறித்தும் பேசியிருந்தார். தற்பொழுது, இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில், அபிஷேக் இந்த வீட்டிலேயே எனக்கு பிரியங்காவாய் தான் ரொம்ப பிடிக்கும் அதற்கு மேல் பேசினால் கண்கலங்கி விடுவேன் என கூறியுள்ளார்.

மேலும், அவரது அக்காதான் தன்னை வளர்த்ததாகவும், அவருக்கு மிகவும் பிடிக்குமாம். அவரது அக்கா திருமணமாகி செல்லும் பொழுது மிகவும் அழுததாகவும் அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து பிரியங்கா அழாதே என்று அபிஷேக்கை கட்டி அணைத்துக்கொள்கிறார் தற்போது அந்த ப்ரோமோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.