கண்ணீர் சிந்தியவர்களை காயப்படுத்திய ராஜு.!! கொளுத்திப் போட்ட பிக் பாஸ்.!!

Photo of author

By Vijay

கண்ணீர் சிந்தியவர்களை காயப்படுத்திய ராஜு.!! கொளுத்திப் போட்ட பிக் பாஸ்.!!

Vijay

Updated on:

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடு காண இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது.

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இந்த சீசனில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரோமோ இன்று காலை வெளியாகியது .அதில் பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் சென்று இரண்டாவது நாளான இன்று போட்டியாளர்கள் கடந்து வந்த பாதை குறித்து கூறிவருகின்றனர்.

அந்த வகையில் முதல் போட்டியாளரான பாடகி இசைவாணி தனது வாழ்க்கையில் நடந்த சோகமான சம்பவங்களைக் கூறிவருகிறார். அதில், தனது தந்தையின் வேலை பறிபோனதையும், அதனால் தாங்கள் பட்ட கஷ்டங்கள் குறித்தும் கண் கலங்கிய நிலையில் கூறினார் .

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில் சக போட்டியாளரான ராஜு கலைஞர்கள் யாரும் தங்களது கஷ்டத்தை காட்டாமல் முன்னுக்கு வருவதில்லை ஆனால், நாம் சிரிக்க மட்டும் தான் செய்ய வேண்டும். நம் கஷ்டத்தை சொல்லி தான் ஆக வேண்டும் என்ற மேடை இருந்தாலும் உங்கள் வாழ்க்கையை கதையாக பண்ணவில்லை. அனைவரும் சூப்பர் என கை கொடுத்தால் நாம் வளர மட்டோம், நடுவில் ஒரு சுவர் இருந்தால்தான் அதை உடைக்க நினைப்போம். இதனை நீங்கள் உடைத்து மேலே வரவேண்டும் என கூறுகிறார். அப்போது சின்னப்பொண்ணுவிடம் சிலர் கோபம் இல்லையே எனக் கேட்கின்றனர். எனவே சின்னப்பொண்ணு மற்றும் இசைவாணி தனது கஷ்டத்தை கூறியது குறித்து ராஜு பேசுவது தெரிகிறது. பிக் பாஸ் ஆரம்பித்த முதல் நாளே சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.