பிக்பாஸ் வீட்டில் சண்டை ஆரம்பம்.!! இன்றைய முதல் புரோமோ.!!

Photo of author

By Vijay

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்காண முதல் புரோமோ வெளியாகியுள்ளது.

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இந்த சீசனில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரோமோ இன்று காலை வெளியாகியுள்ளது .அதில் பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் இன்று கடந்து வந்த பாதை குறித்தும், எதற்காக பிக் பாஸ் டைட்டீலை வெற்றி பெற விரும்புகிறீர்கள்
என்பதை ஒவ்வொருவராக தெரிவித்துவருகின்றனர் .

அந்த வகையில் இன்றைய ப்ரோமோவில் போட்டியாளரான இமான் அண்ணாச்சி தனது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளையும் தான் எதற்காக இந்த பிக் பாஸ் டைட்டில் வெற்றி பெற விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும், நான் ஒரு நகைச்சுவை கலைஞராக இந்த டைட்டில் வெற்றி பெறுவது மிக்க மகிழ்ச்சியாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார். அப்போது சக போட்டியாளர் ஒருவர் இமான் அண்ணாச்சி பேசும் பொழுதே சிரித்துக்கொண்டிருந்தார். இதைக் கண்ட மற்றொரு போட்டியாளர் ஒருவர் பேசும்போது சிரிப்பது அநாகரிகம் என்று அவரிடம் முறையிட்டுள்ளார். இது தற்போது வாக்குவாதமாக மாறி சண்டையாகியுள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் சீசன் வீட்டில் முதல் சண்டை ஆரம்பித்துள்ளது .