பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய நமீதா இப்போ என்ன செய்கிறார் தெரியுமா.? வைரலாகும் வீடியோ.!!

0
147

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய திருநங்கை நமிதா மாரிமுத்து ஆதரவற்றவர்களுக்கு உதவும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 5 ரியாலிட்டி நிகழ்ச்சி கடந்த இரண்டு வாரங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள். இந்த 18 போட்டியாளர்களில் ஒருவரான திருநங்கை நமிதா மாரிமுத்து பெருமளவில் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளராக இருந்தார்.

மேலும், அவரது வாழ்க்கை குறித்து அவர் கூறியது பலரது மனதையும் கவர்ந்தது. எனவே, பலர் அவருக்கு தங்களது ஆதரவை தெரிவித்து வந்த நிலையில் கடந்த வாரம் தவிர்க்க முடியாத சில காரணங்களால் நமிதா மாரிமுத்து பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

மேலும், அடுத்த மூன்று தினங்களில் பிக்பாஸ் வீட்டிற்கு திரும்பி வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், அவர் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு வரவே இல்லை. இந்நிலையில் நமிதா மாரிமுத்து பிக் பாஸ் வீட்டில் விட்டு வெளியேறியது குறித்து பல வதந்திகள் பரவி வருகிறது.

ஆனால், தற்பொழுது நமிதா மாரிமுத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருந்துவருகிறார். சாலையோரங்களில் இருக்கும் ஆதரவற்றோருக்கு உணவளிப்பது போன்ற வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/reel/CVLh4G8hiNa/?utm_source=ig_web_copy_link

Previous articleஇதன் விலையேற்றம் உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்! பிரபல நாட்டில் வருத்தம் தெரிவித்த இந்தியா!
Next articleதோழிக்கு உதவி செய்த பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்! குடும்பத்தினர் செய்த படுகொலை!