பிகில் படத்தில் விஜய்யுடன் ஆடப்போவது ஷாருக்கான் இல்லை! இதோ இந்த பிரபலம் தான்
தளபதி விஜய்யின் ‘பிகில்’ படமானது அட்லீ இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வரும் தீபாவளி வெளியீடாக வரவுள்ளது. இந்தப் படத்தின் பிரதான காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு, தற்போது சிறுசிறு காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்புகூட சென்னைக்கு வெளியே, விலையுர்ந்த பைக் ஒன்றை விஜய் ஓட்டுவது போன்ற காட்சியைப் படமாக்கியது படக்குழு. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
சமீபத்தில் இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘சிங்கப்பெண்ணே’ என்ற பாடலை இணையத்தில் வெளியிட்டது படக்குழு. தற்போது இந்தப் பாடல் 1 கோடி பார்வையாளர்களைக் கடந்துள்ளது. மேலும் பல பெண் ரசிகைகள் இப்போதே இந்தப் பாடலை தங்கள் காலர் டியூனாக பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.

இந்நிலையில் ‘சிங்கப்பெண்ணே’ பாடலில் விஜய்யுடன் இணைந்து ஒரு காட்சியில் தோன்றியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். பல்வேறு இசை ஆல்பங்களில் ஏ.ஆர்.ரஹ்மான் தோன்றியிருக்கிறார். சமீபத்தில்கூட, ‘அவெஞ்சர்ஸ்’பட புரோமோஷனுக்காக உருவான பாடலில்கூட ஏ.ஆர்.ரஹ்மான் கலக்கலாகத் தோன்றியிருப்பார்.
இருந்தாலும், படத்தில் அவர் தோன்றுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே ‘பிகில்’ படத்தின் ஒரு பாடலில் விஜய்யுடன் ஷாரூக் இணைந்து ஆடப்போவதாக தகவல் பரவி வந்த நிலையில், அது உண்மையில்லை என்றும் அதற்குப் பதிலாகத்தான் விஜய் ரசிகர்களுக்கு அட்லீ இந்த சர்ப்பரைஸைத் தரப்போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

நயன்தாரா, கதிர், இந்துஜா உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் விஜய்.
அவரு பாட, இவரு ஆட… அட்டடடடடடா தளபதி ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான் இந்த பிகில்
மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.