காஷ்மீர் விவகாரத்தில் மக்களவையை தெறிக்கவிட்ட திமுக எம்.பி டி.ஆர் பாலு!

0
89

காஷ்மீர் விவகாரத்தில் மக்களவையை தெறிக்கவிட்ட திமுக எம்.பி டி.ஆர் பாலு!

பாஜகவின் முக்கிய தேர்தல் வாக்குறுதியாக பல முறை கூறிய காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கி வரலாற்று சிறப்புமிக்க ஒரு முடிவை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்துள்ளது.

இதனையடுத்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்படும் சிறப்பு அந்தஸ்தை நீக்கி அதை யூனியன் பிரதேசமாக மாற்றும் தீர்மானத்திற்கு எதிர்க் கட்சிகளான காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் சட்டப்பிரிவு 370ஐ நீக்குவதற்கான சட்ட மசோதா லோக் சபாவில் தாக்கல் செய்யப்பட்டு நடந்த விவாதத்தில் பேசிய திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு பாஜக அரசின் இந்த முடிவை எதிர்த்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.

விவாதத்தில் பேசிய திமுக எம்.பி.டி. ஆர்.பாலு மாநிலங்களவையில் அரசியலமைப்பு சட்டத்தை மீறி காஷ்மீர் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் உள்துறை அமைச்சர் சட்டத்தை மீறி செயல்படுகிறார் என்றும், காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் என்ன ஆனார்கள்? எதற்காக அவர்களை வீட்டு சிறையில் வைத்துள்ளீர்கள் என்பதற்கான காரணத்தை விளக்க வேண்டும் என்றும் மத்திய அரசிடம் விளக்கம் கேட்டுள்ளார்.

பாஜக அரசின் வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த முடிவை எதிர்த்து விமர்சனம் செய்த அவரின் பேச்சுக்கு பாஜக உறுப்பினர்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும் பேசிய அவர் “உமர் அப்துல்லாவும், மெகபூபா முப்தியும் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று நாடாளுமன்றம் வர வேண்டிய பரூக் அப்துல்லாவும் வரவில்லை. அவர்கள் நிலைமை என்ன? நாட்டில் என்ன எமர்ஜென்சியா நடக்கிறது? ராணுவத்தை துணையாக வைத்து கொண்டு மத்திய அரசு ஒரு சட்டத்தை நீக்கி இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பாஜக தேர்தல் அறிக்கையில் கூறியதை அவசரகதியில் நிறைவேற்றி உள்ளீர்கள்.

காஷ்மீர் மாநிலத்தில் இதற்காக முறையான தேர்தலை நடத்தி மக்களின் கருத்தை முழுமையாக கேட்ட பின்புதான் இது நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும் என்றும், ஏன் அதை செய்யவில்லை?” என்றும் ஆவேசமாக பேசியுள்ளார்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

author avatar
Parthipan K