திமுகவின் இந்தி எதிர்ப்புக்கு ஆப்பு வைத்த நிதிஷ் குமார்! குழப்பத்தில் ஸ்டாலின்

0
360
#image_title

திமுகவின் இந்தி எதிர்ப்புக்கு ஆப்பு வைத்த நிதிஷ் குமார்! குழப்பத்தில் ஸ்டாலின்

 

பிகார் முதல்வர் நிதீஷ் குமார் இந்தி கற்றுக் கொள்வது குறித்து பேசியதால் கூட்டணி கட்சியான திமுகவின் தமிழ் பற்று வேஷம் கலைந்து விட்டது என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

டெல்லியில் கடந்த இரு தினங்களுக்கு முன் இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 28 கட்சிகள் பங்கேற்றன. திமுக ஆலோசனைக் கூடத்தில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் மற்றும் டி.ஆர.பாலு எம்.பி. கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பிகார் முதல்வர் நிதீஷ் குமார் அவர்கள் இந்தியில் பேசத் தொடங்கினர். அவரின் இந்தி மொழியை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து சொல்ல வேண்டும் என்று திமுக டி.ஆர.பாலு கேட்டுக் கொண்டார். இதற்கு கடும் கோபமடைந்த நிதீஷ் இந்தி மொழி இந்தியாவின் தேசிய மொழி. அனைவருக்கும் இந்தி மொழி பேசத் தெரிந்திருக்க வேண்டும். ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு சென்ற போதே ஆங்கிலமும் போய்விட்டது என்று ஆவேசமாக கூறினார். இதனால் இந்தியா கூட்டணியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் பாஜக இந்தி கற்றுக்கொள்ளுங்கள் என்றாலோ, இந்தி மொழியில் திட்டங்களை அறிவித்தலோ அதை இந்தி திணிப்பு என்று உடனே அறிக்கை, போராட்டம் நடத்தும் திமுக, தற்பொழுது கூட்டணி கட்சியில் இருக்கும் நிதீஷ் குமார் அவர்கள் இந்தி கற்றுக்கொள்ளுங்கள் என்று கூறியதற்கு எந்த ஒரு எதிர்ப்பும், போராட்டமும் நடத்தாமல் அமைதியாக இருக்கிறது.

இதனால் திமுகவின் தமிழ்ப்பற்று வேஷம் வெளிச்சத்திற்கு வந்து விட்டது. திமுக நடத்தும் இந்தி எதிப்பு போராட்டங்கள் எல்லாம் வெறும் நாடகம் என்று நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Previous articleஊழல் வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை – உயர்நீதிமன்றம் அதிரடி!!
Next articleபிக்பாஸ் 7 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் அதிரடி கைது!