சேலம் மாவட்டத்தில் ஜெட் வேகத்தில் பறந்த பைக்  திருடன்!? 

Photo of author

By Parthipan K

சேலம் மாவட்டத்தில் ஜெட் வேகத்தில் பறந்த பைக்  திருடன்!?

சேலம் மாவட்டத்தில் கொண்டலாம்பட்டி அருகே உள்ள சன்னியாசி குண்டை சேர்ந்தவர் பிரபாகரன். அவருடைய வயது 25. இவர் கடந்த ஏழாம் தேதி அன்று அவரது வீட்டில் இருந்து இரும்பாலை அருகே கொல்லப்பட்டியில் உள்ள தன்னது உறவினர் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.

இந்நிலையில் அரசமரத்து கரட்டூர் பிரிவு ரோட்டிற்கு வந்தபோது அந்த இடத்தில் மர்ம நபர் ஒருவர் முகமூடி அணிந்து கொண்டு பிரபாகரனை தாக்கி விட்டு அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை பறித்து சென்றுள்ளார். மர்ம நபர் தாக்கியதில் பிரபாகரன் பலத்த காயம் அடைந்தார்.

பின்னர் தன் உறவினர்களுக்கு தொலைபேசியில் நடந்ததை கூறி இருந்தார். இதைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இச்சம்பவம் குறித்து அவர் போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.

இந்த புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற நபரை தேடி வருகின்றனர். மேலும் இச்சம்பவத்தன்று ஈடுபட்டது அமானி கொண்டலாம்பட்டியைச் சேர்ந்த சரவணன் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவர் பறித்துச் சென்ற மோட்டார் சைக்கிளை மீட்டு பிரபாகரனிடம் ஒப்படைத்தனர்.