நமது உடலில் பித்தம் குறைந்தலோ,அதிகமானலோ கண் எரிச்சல்,தலை சுற்றல்,பாத எரிச்சல் போன்ற பல பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.சிலருக்கு அதிக பித்தத்தால் இளம் வயதிலேயே தலைமுடி நரைத்துவிடுகிறது.இதை தான் பித்த நரை என்று அழைக்கின்றோம்.இந்த பித்தத்தை சம நிலையில் வைக்கும் பித்த சூரணம் தயாரிக்கும் முறையை காண்போம்.
தேவையான பொருட்கள்:
1)கருஞ்சீரகம் – 25 கிராம்
2)இந்துப்பு – ஒரு தேக்கரண்டி
3)சீரகம் – 25 கிராம்
4)எலுமிச்சை சாறு – தேவையான அளவு
5)சுக்கு – ஒரு துண்டு
தயாரிக்கும் முறை:
முதலில் மேலே சொல்லப்பட்டுள்ள அளவுப்படி பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு கருஞ்சீரகம்,சீரகம் மற்றும் சுக்கை லேசாக வறுத்தெடுத்துக் கொள்ளுங்கள்.
அதன் பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்க்கவும்.அடுத்து ஒரு தேக்கரண்டி இந்துப்பு சேர்த்து பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பிறகு தயாரித்து வைத்துள்ள சூரணம் ஒரு தேக்கரண்டி அளவு போட்டு கொதிக்க வையுங்கள்.இதை கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து பருகினால் உடலில் பித்த அளவு சமநிலையில் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
1)சுக்கு – ஒரு துண்டு
2)பெரிய நெல்லிக்காய் – 10
3)சீரகம் – 25 கிராம்
தயாரிக்கும் முறை:
முதலில் பெரிய நெல்லிக்காயை வெயிலில் நன்கு காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து சலித்து எடுத்துக் கொள்ளுங்கள்.
அடுத்து ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கிவிட்டு நெருப்பில் சுட்டு பொடித்துக் கொள்ளுங்கள்.இதற்கு அடுத்து 25 கிராம் சீரகத்தை வாணலியில் போட்டு வறுத்து பொடியாக்கி கொள்ளுங்கள்.
இப்பொழுது இந்த மூன்று பொடிகளையும் ஒன்றாக மிக்ஸ் செய்து ஒரு டப்பாவில் கொட்டி சேகரித்துக் கொள்ளுங்கள்.
பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றுங்கள்.இதனுடன் அரைத்த பொடி ஒரு தேக்கரண்டி சேர்த்து கொதிக்க வைத்து பருகி வந்தால் பித்தம் சமநிலையில் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
1)பால் – ஒரு கிளாஸ்
2)சுக்குப் பொடி – அரை தேக்கரண்டி
தயாரிக்கும் முறை:
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பிறகு அதில் 1/2 தேக்கரண்டி சுக்குப் பொடி சேர்த்து காய்ச்சி தேன் கலந்து பருகி வந்தால் உடலில் பித்தம் கட்டுப்படும்.