கொரோனோ வைரஸால் உலகப்போர்: ஒரு ஆண்டுக்கு முன்னரே எச்சரித்த பில்கேட்ஸ்

0
136

சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனோ வைரஸ் தாக்குதலால் அந்நாட்டில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதுவரை நூற்றுக்கும் அதிகமானோர் பலியாகி இருப்பதாகவும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

கொரோனோ வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பகுதி மற்ற நகரங்களில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவில் பரவ ஆரம்பித்த இந்த வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருவதாகவும் இந்த வைரஸை கட்டுப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இப்படி ஒரு வைரஸ் உலகம் முழுவதும் பரவி கோடிக்கணக்கானோர் உயிரிழக்க வாய்ப்பு உள்ளது என ஒரு ஆண்டுக்கு முன்னரே மசாசூட்ஸ் மருத்துவ சங்கத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டபோது மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கூறியுள்ளார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

இது குறித்து அவர் பேசியபோது ’உலகம் முழுவதும் ஒரே ஒரு வைரஸால் தாக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் இந்த வைரஸால் உலகப் போர் மூளும் அபாயம் உள்ளதாகவும் இந்த வைரஸில் இருந்து மக்களை காப்பாற்ற நாம் தயாராக வேண்டும் என்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் பேசியுள்ளார். அவர் கொரோனோ வைரஸ் குறித்துதான் முன்கூட்டியே பேசி இருப்பதாக தற்போது கூறப்படுகிறது.

Previous articleமோடிக்கு அடுத்த இடத்தை பிடித்த ரஜினி: ஒரு சூப்பர் தகவல்
Next articleஇரவு முழுக்க உல்லாசம்! கையும் களவுமாக சிக்கிய கள்ளக்காதல் ஜோடி!!