பெண்களுக்கு இட ஒதுக்கீடு தொடர்பான மசோதா!!! நன்றி தெரிவித்த மகளிர் பிரிவினர்!!!
பெண்களுக்கு 33 சதவீதம் ஒதுக்கீடு தரும் மசோதாவை அறிமுகப்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு பாஜக மகிளா மோர்ச்சாவின் தில்லி மகளிர் பிரிவு நன்றி தெரிவித்து உள்ளது.
மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு தர வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. இந்நிலையில் மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவையில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யும் மசோதாவிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மெஹ்வால் அவர்கள் நேற்று அதாவது செப்டம்பர் 19ம் தேதி பெண்களுக்கு மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவையில் 33 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யும் மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார்.
இது தொடர்பாக பேசிய தில்லி மகளிர் பிரிவு தலைவர் ரிச்சா பாண்டே அவர்கள் “மகிளா மோர்ச்சா தலைவர்கள் அனைவரும் தொழிலாளர்கள் ரயில் பவன் மற்றும் நாடாளுமன்ற கட்டிடத்தில் சுற்றுவட்டாரங்களில் உள்ள 15 இடங்களில் ஒன்றாக கூடினர். பின்னர் நாட்டில் பெண்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வந்த மக்களவை மாநில சட்டப்பேரவையில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்றியதற்காக பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்” என்று கூறினார்.
மேலும் பேசிய ரிச்சா பாண்டே அவர்கள் “பல ஆண்டாக பல்வேறு தடை காரணமாக நிறைவேற்றாமல் இருந்த மசோதாவை தடைகளை கடந்து நிறைவேற்றிய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம்” என்று கூறினார்.