தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படும் பயோமெட்ரிக் முறை!! கல்லூரி பேராசிரியர்களுக்கு காத்திருக்கும் புதிய டுவிஸ்ட்!!

Photo of author

By Gayathri

உயர் கல்வித் துறை தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகத்திலும் பயோ மெட்ரிக் முறையை உடனடியாக கொண்டு வர முடிவெடுத்துள்ளது.

இது தொடர்பான செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பது :-

பல்கலைக் கழகங்களை பொறுத்தவரையில் அலுவலர்கள், பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் கல்லூரிக்கு தாமதமாக வந்து பின் சீக்கிரமாக சென்று விடுவதாக பல குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

இவர்கள் இவ்வாறு நடந்து கொள்வதால், பல்கலைக்கழகத்திற்குள் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. மேலும் பல்கலைக்கழகத்திற்கு சம்பந்தம் இல்லாத பலரும் உள்ளே வந்த செல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதனால் மாணவர்களிடையே அதிக அளவில் போராட்டங்கள் எழுகின்றன. இது மாணவர் மற்றும் ஆசிரியர் இடையே சுமூக உறவை துண்டிப்பதாக அமைந்துள்ளது.

இதனை தவிர்க்கவும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் பல்கலைக்கழகங்களில் பயோ மெட்ரிக் வருகை பதிவை உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் என உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இனி பல்கலைக்கழகத்திற்குள் நுழையும்போது, பணி முடிந்து வெளியேறும் போதும் வருகைப் பதிவை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் எனவும் அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.