பறவை காய்ச்சல்: இதன் அறிகுறிகள் மற்றும் குணப்படுத்திக் கொள்ளும் வழிகள்!!
கேரளாவில் பரவி வரும் பறவை காய்ச்சலால் தமிழகத்தில் சுகாதார பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டு வருகிறது.பறவை காய்ச்சல் அதாவது இன்ஃப்ளூவன்சா என்பது பறவைகளின் இடம் இருந்து மனிதர்களுக்கு பரவக் கூடிய ஒரு வைரஸ் தொற்றாகும்.
இவை ஒரு ஆபத்து நிறைந்த வைரஸ் தொற்றாகும்.இந்த வைரஸ் தொற்று பாதித்த கோழி மற்றும் அதன் முட்டைகளை சாப்பிடுவதன் மூலம் பறவை காய்ச்சல் எளிதில் ஏற்பட்டு விடுகிறது.
பறவை காய்ச்சலுக்கான காரணங்கள்:-
தொற்று பாதிக்கப்பட்ட பறவைகளின் எச்சம்,கண்களில் இருந்து வெளியேறக் கூடிய திரவங்கள்,மூக்கு,வாய் ஆகியவற்றை மனிதர்கள் தொடும் பொழுது அவை பரவுகிறது.எனவே தொற்று பாதிக்கப்பட்ட பறவைகளிடம் இருந்து தங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது நல்லது.
பறவை காய்ச்சல் அறிகுறிகள்:-
1)காய்ச்சல்
2)தலைவலி
3)வயிற்றுப்போக்கு
4)தொண்டை வலி
5)சுவாசிப்பதில் சிரமம்
6)சளி ஒழுகுதல்
7)உடல் வலி
பறவை காய்ச்சல் பதிப்பில் இருந்து தப்பித்துக் கொள்ள வழிகள்:-
வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட பறவைகளிடம் இருந்து விலகி இருக்க வேண்டும்.
கை,கால்களை அடிக்கடி கழுவிக் கொள்ளவும்.வீட்டில் கோழி,வாத்து போன்ற பறவைகள் இருந்தால் அவைகளை தொடாமல் இருப்பது நல்லது.
மேலே சொல்லப்பட்டுள்ள அறிகுறிகள் உடலில் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
சளி,தும்மல்,இருமல் மூலம் இவை பரவக் கூடும்.எனவே இந்த அறிகுறிகள் இருப்பவர்களிடம் இருந்து விலகி இருப்பது தங்களுக்கு நல்லது.
வெளியில் சென்று விட்டு வீட்டிற்கு வந்தால் சோப் பயன்படுத்தி முகம்,கை கால்களை சுத்தப்படுத்த வேண்டும்.