பர்த்டே கொண்டாட்டம் புறநோயாளிகள் கெட்அவுட்! ஒலி பெருக்கி கொண்டு விரட்டிய அரசு மருத்துவமனை!
புதுச்சேரி ஜிப்மருக்கு ,புதுச்சேரி மட்டுமல்லாமல் தமிழகப் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் சிகிச்சை பெறுவதற்கு வருவது வழக்கம்.இந்நிலையில் இன்று குருநானக் பிறந்தநாள் கொண்டாடப்படுகின்றது.அந்த கொண்டாத்தின் காரணமாக புறநோயாளிகள் சிகிச்சை பிரிவுக்கு மத்திய அரசு நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அந்த விடுமுறையின் காரணமாக ஜிப்மரில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு மூடப்பட்டது இந்த விடுமுறையை ஜிப்மர் நிர்வாகம் முறையாக அறிவிக்கவில்லை.அதனால் தமிழக பகுதிகளான விழுப்புரம் ,கடலூர் ,தஞ்சை என பல்வேறு பகுதிகளில் இருந்து நோயாளிகள் சிகிச்சைக்காக வந்தனர்.
ஆனால் நோயாளிகள் ஒருவரையும் சிகிச்சைக்காக அனுமதிக்கபடமால் மருத்துவமனை நுழைவாயில் கதவு மூடப்பட்டது.இந்நிலையில் அங்கு சிகிச்சைக்காக நெடுந்தொலைவில் இருந்து வந்தவர்களையும் அனுமதிக்கவில்லை.மேலும் தொடர் சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளும் ஜிப்மரின் இந்த முடிவால் கடும் அவதி அடைந்துள்ளனர்.
வெளியே நின்று கொண்டிருந்த நோயாளிகளை ஜிப்மர் காவலாளிகள் அங்கிருந்த நோயாளிகளை வெளியேற்றினர்.அதில் கர்ப்பிணி பெண்களும் அடங்குவார்கள்.மேலும் நேரம் ஆக ஆக ஒலிபெருக்கி மூலம் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு மூடப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டது.