செல்லப்பிராணியின் வினோத செயல் – பார்வையாளர்களை கவர்ந்தது!

Photo of author

By Parthipan K

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் நகரில், கடந்த வருடங்களை விடவும், வழக்கத்திற்கு மாறாகவும், அதிக அளவில் பனிப்பொழிவு நிகழ்ந்து வருகிறது. குளிர் மற்றும் பனிப்பொழிவும் அதிகமாக இருப்பதால் அங்கு வாழும் மக்கள் அனைவரும் ரசித்து வருகின்றனர்.

இந்நிலையில் உற்சாகமடைந்த ஏழு வயதான செல்லப் பிராணி ‘சம்ப்ரஸ்’ ( இது ஒரு பிச்சான் பிரைஸ் இனத்தைச் சேர்ந்த நாய் ) தனது வீட்டு தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த மேஜையில், உறைந்து இருந்த ஐஸ் கட்டிகளை பார்த்து உற்சாகத்தில் துள்ளிக் குதித்து, அதன்பின் அதனை ஆர்வமுடன் ருசித்து உள்ளது.

இந்த செல்லப்பிராணியின் உரிமையாளர் கிறிஸ்டின் அஷன் இதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த அனைவரும் செல்லப்பிராணியின் செயலைப் பார்த்து ஆச்சிரியத்துடன் ரசித்து வருகின்றனர்.

இந்த வீடியோவில் செல்லப் பிராணியின் உரிமையாளர் கிறிஸ்டின் ஆஷன், “வெப்பத்திலேயே வளர்ந்த சம்ப்ரஸ், பனிக்கட்டியை பார்த்து உற்சாகம் அடைந்து உள்ளதாகவும், தனது செல்லப்பிராணியின் இந்த செயல் தனக்கு புது அனுபவத்தை தந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்”.