குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவு கூட்டத்தில் விசிகவினர் ரவுடிசம்!! மதுரையில் பரபரப்பு..!!

Photo of author

By Jayachandiran

குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவு கூட்டத்தில் விசிகவினர் ரவுடிசம்!! மதுரையில் பரபரப்பு..!!

மதுரை அலங்காநல்லூர் அருகே, பாஜகவினர் நடத்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து பிரச்சராம் செய்யப்பட்டது. பாஜகவின் புறநகர் மாவட்ட தலைவரான சுசீந்திரன் தலைமையில் இக்கூட்டம் அமைதியாக நடந்து கொண்டிருந்தது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கருத்து தெரிவித்திருந்த மதிமுகவின் வைகோ மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோரை கண்டித்து கோசம் எழுப்பப்பட்டது.

இந்நிலையில், பிரச்சார கூட்டத்திற்குள் திடீரென உருட்டுக் கட்டைகளுடன் புகுந்த விசிக கட்சியினர் ரவுடிகளைப் போல் பாஜக தொண்டரை தாக்கினர். இதையடுத்து இரு தரப்பிற்கும் கடும் மோதல் ஏற்பட்டது. இச்சம்பவத்தை கேள்விப்பட்ட காவல் துறையினர் உடனடியாக களத்தில் இறங்கி சண்டையை தடுத்தனர்.

இதைத் தொடர்ந்து பிரச்சார கூட்டத்தில் கொலை வெறித் தாக்குதலை நடத்திய விசிக கட்சியினரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அலங்காநல்லூர் சாலையில் பாஜகவினர் மறியலில் ஈடுபட்டனர். காவல் துறையினரின் பேச்சை மதித்து கலைந்து சென்ற பாஜகவினர் மீண்டும் அலங்காநல்லூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கொலை வெறி தாக்குதல் நடத்திய விசிக ரவுடிகளை கைது செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.

இச்சம்பவம் தொடர்பாக தவறு செய்தவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் கூறிய பின்னர், புகார் செய்துவிட்டு பாஜகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த திடீர் சம்பவத்தால் அலங்கநல்லூரில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.