பாஜக அண்ணாமலை பதவி விலகலா? கர்நாடக மாநிலத்தில் புதிய பதவி!!
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு தற்பொழுது கூடுதல் பொறுப்பாக கர்நாடகா பாஜக மேலிட துணைப் பொறுப்பாளர் பதவியை வழங்கியுள்ளனர். ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் கூட்டணி கட்சிகளிடம் ஆலோசனை செய்வதற்காக முக்கிய நிர்வாகிகளை தலைவர் துணைத் தலைவர் என பாஜக மேலிட பொறுப்பாளராக நியமிப்பது வழக்கம்.
அந்த வகையில் நமது தமிழகத்திற்கு கூட்டணி கட்சிகளிடம் ஆலோசனை செய்வதற்கு மேலிட பொறுப்பாளராக ஆந்திராவின் சி டி ரவி என்பவர் பதவி வகித்துள்ள நிலையில் தற்போது நடைபெற போகும் இடைத்தேர்தல் குறித்து கூட நேற்று அதிமுக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இரு அணியிடமும் ஆலோசனை நடத்தினார்.
தற்பொழுது அண்ணாமலை கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் வருவதை யொட்டி அங்குள்ள கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்த துணை மேலிட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் இதற்கு முன்பாகவே அந்த மாநிலத்தில் தான் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்ததால் அங்கு நடைபெற போகும் சூழ்நிலை குறித்து நன்றாக அறிவார் என்பதனால் இவரை நியமித்துள்ளதாக கட்சி சுற்று வட்டாரங்கள் கூறுகிறது. ஆனால் இளம் வயது உள்ள இவரை அனைத்து பொறுப்புகளிலும் அமர வைப்பது மூத்த நிர்வாகிகளிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதுமட்டுமின்றி இவருக்கு பொறுப்பாளர் பதவி வழங்காமல் இணை பொறுப்பாளர் பதவி வழங்கியதற்கு இவர் அரசியலில் அதிக அளவு கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் காரணம் எனவும் கூறுகின்றனர். இவ்வாறு இந்த மேலிட பொறுப்பில் இருந்தால் நாளடைவில் தமிழகத்தில் வரப்போகும் தேர்தல்களை எந்த வகைகளில் எதிர்கொள்ளலாம் என்பது குறித்து நன்றாக அறிந்து கொள்வார் என்றும் கூறுகின்றனர்.