ஜூலை 18 தமிழ்நாடு நாள்-பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு.!!

0
220

நேற்று, தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று அண்ணா பெயர் சூட்டிய ஜூலை-18 ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

மேலும், தமிழ்நாடு நாள் கொண்டாடுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசாணை மூலம் விரைவில் வெளியிடப்படும் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்நாடு தனித்து உருவான நவம்பர் 1 ஆம் தேதி தான் ‘தமிழ்நாடு நாள்’ ஆக கொண்டாடப்பட வேண்டும்.

கடந்த அதிமுக அரசு நவம்பர் 1 ஆம் தேதி ‘தமிழ்நாடு நாள்’ என அறிவித்த ஒரே காரணத்தால், திமுக அரசு அதை மாற்ற நினைப்பது அழகல்ல என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேலும், வரலாற்றை திசை திருப்புவதே திமுக அரசின் உள்நோக்கமாக உள்ளது எனவும் என விமர்சித்துள்ளார்.

 

Previous article14 மாவட்டங்களில் தீபாவளி கொண்டாட தடை-அரசு அதிரடி அறிவிப்பு.!!
Next articleசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல் நலத்திற்கு கோவிலில் சிறப்பு வழிபாடு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here