தமிழகத்தில் உள்ள அனைத்து திருக்கோவில்களிலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் உட்பட அனைத்து நாட்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதி அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை வரவேற்று நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “மக்களுக்கான எங்களின் போராட்டத்திற்கு மதிப்பளித்து முடிவெடுத்த தமிழக அரசுக்கு பாராட்டுக்கள், நவராத்திரி திருநாளில் தமிழக பாஜகாவின் வேண்டுகோளுக்கிணங்க எல்லா நாட்களிலும் திருக்கோயில்களை திறக்க உத்தரவிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பி.கே சேகர்பாபுக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் திருக்கோயில்களை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திறக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
நவராத்திரி திருநாளில்@BJP4TamilNadu வேண்டுகோளுக்கிணங்க எல்லா நாட்களிலும் திருக்கோயில்களை திறக்க உத்தரவிட்ட முதல்வர்@mkstalin
அவர்களுக்கும் அறநிலை அமைச்சர்@PKSekarbabu அவர்களுக்கும் நன்றி!— K.Annamalai (@annamalai_k) October 14, 2021