பாஜக அண்ணாமலை: பால் விலை மின் கட்டணம் அடுத்தடுத்த பெரும் அடிகளை கொடுத்த விடியா அரசு- தமிழகம் முழுவதும் நாளை கண்டன ஆர்ப்பாட்டம்!
திமுக சமீபத்தில் பாலின் விலையை உயர்த்தி ஆணை பிறப்பித்தது. பால் உற்பத்தியாளர்கள் சங்கம் பல நாட்களாக கொள்முதல் விலையை உயர்த்துமாறு கோரிக்கை விடுத்தது. அந்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு கொள்முதல் விலையை மூன்று ரூபாயாக உயர்த்தி வழங்கியது. இதனால் ஆவின் ஆரஞ்சு பால் பாக்கெட்டின் விலை ஒரு லிட்டர் 48 ரூபாயாக இருந்த நிலையில் தற்பொழுது 60 முதல் 62 ரூபாயாக உயர்த்தி உள்ளனர்.
இதனை பலரும் எதிர்த்து கண்டனம் தெரிவித்தனர். மின்கட்டணத்தை உயர்த்தியதை தொடர்ந்து தற்பொழுது பாலின் விலையும் தமிழக அரசு உயர்த்தியது, பாமர மக்களுக்கு பெரியளவில் பாதிப்பை கொடுக்கும். இதனை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப் போவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, பச்சிளம் குழந்தை முதல் பெரியோர்கள் வரை அனைவரும் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருள்தான் பால். இதனின் விலையை தமிழக அரசு உயர்த்தியது பாஜக வன்மையாக கண்டிக்கிறது. திமுக வந்தால் விடியல் ஆட்சி தான் என்று கூறிய நிலையில் தற்போது மக்களின் கண்களை கட்டி இருட்டுக்குள் அனுப்பி விடுகின்றனர் என்று கூறினார். நாளை மின்கட்டண உயர்வு மற்றும் பால் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக தெரிவித்தார்.