பாஜக முக்கிய நிர்வாகிக்கு அறுவை சிகிச்சை!! தீவிர சிகிச்சை பிரிவில் திடீர் அனுமதி!! 

0
341
#image_title

பாஜக முக்கிய நிர்வாகிக்கு அறுவை சிகிச்சை!! தீவிர சிகிச்சை பிரிவில் திடீர் அனுமதி!!

சென்னை: திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதன் காரணமாக பாஜக நிர்வாகி கே.டி.ராகவன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மாநில பாஜக பொதுச் செயலாளராக செயல்பட்ட கே.டி. ராகவன் பல வருடங்களாக தொலைக்காட்சிகளில் அரங்கேறி வரும் கட்சி விவாதங்களில் கலந்து கொண்டு பாஜக குறித்த கருத்துக்களை முன் வைத்து வந்துள்ளார். இதன் காரணமாகவே பாஜக முக்கிய நிர்வாகிகளில் இவரும் ஒருவராக திகழ்ந்தார். இதற்கிடையே மாநில பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றார்.

இதனை அடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு பாஜக பொதுச்செயலாளர் கே.டி. ராகவன் ஆபாச வீடியோ வெளியானது. பின்பு மாட்டிக்கொண்ட அவர் கட்சியின் பொறுப்பில் இருந்து விலகி பின் எந்த வித செயல்பாடுகளிலும் ஈடுபடாமல் இருந்தார்.

தற்போது முன்னாள் பாஜக நிர்வாகியான கே.டி.ராகவன் திடீரென்று மூச்சுத்திணறல் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று கே.டி. ராகவனுக்கு இதய அறுவைசிகிச்சை செய்யப்படும் என மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் பாஜக நிர்வாகிகள் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Previous article14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!
Next articleமாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! இந்த தேதியில் இங்கு உள்ளூர் விடுமுறை!