14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!

0
191
chance-of-rain-in-14-districts-information-released-by-the-meteorological-department
chance-of-rain-in-14-districts-information-released-by-the-meteorological-department

14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!

கடந்த 2022 டிசம்பர் மாதம் உருவான மாண்டஸ் புயலின்  தாக்கத்தால் தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் கனமழை பெய்தது. கனமழையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர். மேலும் தமிழகத்தில் ஒரு சில பகுதிகள் சேதமடைந்தது.

ஜனவரி மாதத்தில் மழையின் தாக்கம் குறைந்து வெயில் தொடங்கியது. இந்நிலையில் கடந்த வாரம் முதல் அனைத்து பகுதிகளிலும் மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தென்னிந்திய மீது வளிமண்டல கீழ் அடுக்குகளில் கிழக்கு மேற்கு காற்று சந்திக்கும் பகுதியின் நிலை வருகிறது.

அதனால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை  பெய்து வருகின்றது. மேலும் தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நீலகிரி, கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.