பாஜக நிர்வாகியின் அதிரடி செயல்.. கங்குவா ஓடாததற்கு ஜோதிகா தான் முக்கிய காரணம்!!

Photo of author

By Rupa

Kanguva: சூர்யாவின் கங்குவா படமானது இரண்டரை ஆண்டுகள் கழித்து திரையரங்குகளில் வெளியானது. இரண்டரை ஆண்டுகள் கழித்து இந்த படம் வெளியாகியதால் அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் திரையரங்குகளில் படம் பார்த்தவர்கள் எதிர்மறை கருத்துக்களையே கூறினர். இவ்வாறு இருக்கையில் பாமக பாஜக என இரு கட்சிகளும் கங்குவா படம் குறித்து ரோஸ்ட் செய்து வருகின்றது. குறிப்பாக ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படமானது மக்களிடையே சாதிய கலவரத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்.

ஏனென்றால் அந்த படத்தில் வரும் சப் இன்ஸ்பெக்டர் பெயரானது குரு என்று வைக்கப்பட்டதுடன், அவரது வீட்டில் பாமக சின்னம் பொருத்திய அக்னி கலசம் இருந்துள்ளது. இதை வைத்து அவர்கள் பாமக-வை  சுட்டிக்காட்டியதோடு இதர சமூகத்துடன் இருந்த பரஸ்பர நல்லுறவை உடைக்கும் காட்சி அமைத்திருக்கிறது என  கூறி இதனை பெருமளவு பாமக-வினர் எதிர்த்தனர். சூர்யா மற்றும் அப்படத்தின் இயக்குனர் உள்ளிட்டவர்களை மன்னிப்பு கேட்க கோரியும் சூர்யா மன்னிப்பு கேட்கவில்லை.

இதனால் கோவமடைந்த பமாகவினர் சூர்யாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஜோதிக -வால் பாஜகவின் வெறுப்பையும் சம்பாரித்துக் கொண்டனர். அவர் ஒரு மேடையில் கோவில்களை கட்டுவதற்கு பதிலாக பள்ளிக் கூடங்களை கட்டலாம் என தெரிவித்தார். இவர் ஏன் சர்ச்க்களை குறிப்பிடாமல் கோவில்களை மட்டும் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கும்  பாஜகவினர் பெரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இவ்வாறு இருக்கையில் தற்பொழுது சூர்யாவின் படம் குறித்து இரு கட்சிகளிலும் மாற்றி மாற்றி தங்களது விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். மேலும் பாஜக-வை சேர்ந்த அஸ்வத்தமன் சூர்யாவின் படம் பார்ப்பதற்காக வைத்திருந்த காசைத்தான் சிவானந்த குருகுலத்திற்கு அனுப்பி வைத்துவிட்டேன் என போஸ்ட் போட்டுள்ளார். இது பெருமளவு வைரலாகி வருகிறது.