இரட்டை இலைக்காக பாஜக பின்னால் போகும் ஓபிஎஸ் –  இபிஎஸ்!  கூட்டணிக்காக எம்ஜிஆர்  ஜெயலலிதா கட்டிக்காத்த வரலாற்றை மாற்றிய அவலம்! 

0
223

இரட்டை இலைக்காக பாஜக பின்னால் போகும் ஓபிஎஸ் –  இபிஎஸ்!  கூட்டணிக்காக எம்ஜிஆர்  ஜெயலலிதா கட்டிக்காத்த வரலாற்றை மாற்றிய அவலம்! 

இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற அதிமுகவில் ஓபிஎஸ் அணியும் இபிஎஸ் அணியும் பாஜகவின் உதவிக்காக அதன் பின்னால் போவது பற்றி விமர்சகர்கள் பல்வேறு விமர்சனங்களை முன் வைத்துள்ளனர்.

தமிழகத்தின் தவிர்க்க முடியாத ஒப்பற்ற தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆர் திண்டுக்கல் மாவட்டத்தில் 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் நாள் இரட்டை இலை சின்னத்தை முதல் முறையாக அறிமுகம் செய்தார். இனிமேல் நான் திமுகவிற்காக வாக்கு சேகரிக்க போவதில்லை. எனது சின்னம் இனி இரட்டை இலை தான்.

இதன்படி இரட்டை இலை சின்னத்தை முன்னிறுத்தி வெற்றி பெற்று தமிழகத்தின் முதலமைச்சராக எம்ஜிஆர் பதவி ஏற்று சிறப்பான முறையில் ஆட்சி செய்தார். அவரைப் போலவே ஜெயலலிதாவும் பின்பற்றி தமிழகத்தின் முதலமைச்சராகி சிறப்பான முறையில் ஆட்சி செய்து தனி பெரும்பான்மை கட்சியாக இந்தியாவில் இரட்டை இலையை நிலைநிறுத்தினார்.

எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரும் ஆட்சி பொறுப்பில் இருந்து வரை எந்த கட்சியிடமும் கூட்டணிக்காக என்று சென்றதில்லை. என்று அரசியல் பார்வையாளர்கள் எம் ஜி ஆர் ஜெயலலிதா பற்றிய வரலாற்றை  முன்வைக்கின்றனர்.

அதற்கு ஏற்றார் போல் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கவே பல்வேறு கட்சிகளும் காத்திருந்தனர். அதற்கு ஏற்றார் போல் அதிமுக கூட்டணி என்று யாரிடமும் கேட்டுச் சென்றதில்லை. ஆனால் தற்போது அதிமுகவில் இருக்கும் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகிய இருவரும் எதற்கெடுத்தாலும் பாஜகவின் பின்னாலே ஓடுகின்றனர். அதிமுக கூட்டணி கேட்டு செல்லும் அளவிற்கு பாஜக தமிழகத்தில் தனி பெரும்பான்மை கட்சியாக வளர்ந்து விட்டதா? என்று அரசியல் பார்வையாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

வருகின்ற இடைத்தேர்தலில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தங்கள் சார்பில் தனித்தனி வேட்பாளர்களை அறிவித்தால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தவிர்க்கவே ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவரும் பாஜகவின் ஆதரவை நாடுவதாக கூறப்படுகிறது. இரட்டை இலை சின்னம் வேண்டுமானால் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் இணைந்து கையெழுத்து போட வேண்டும். ஆனால் தற்போதையுள்ள சூழ்நிலையில் ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியாக இருப்பதால் வேட்பாளர்களை நிறுத்தும் பட்சத்தில் இரட்டை இலை கட்டாயம் முடக்கப்படும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். வரலாற்றில் முதல்முறையாக எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டி காத்த வரலாற்றை உடைத்துவிட்டு கூட்டணிக்காக அதிமுக நாடி சென்றது இதுவே முதல் முறை என்று அவர்கள் விமர்சிக்கிறார்கள்.

Previous articleதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் பறந்த செய்தி! உயர் நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!
Next articleபாஸ்வேர்டை கூற இனி கட்டணம் செலுத்த வேண்டும்! இரண்டு மாதங்களில் வெளியாகவுள்ள  புதிய நடைமுறை!