தமிழகத்தில் பாஜக வெற்றி வாய்ப்பு உள்ளது..?? ஏபிபி சி வோட்டர் சர்வே கூறுவது என்ன தெரியுமா..??
தமிழ்நாட்டில் தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ளதால், தேர்தல் பிரச்சாரங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. அதுமட்டுமின்றி இந்த தேர்தலில் எந்தெந்த கட்சிகள் முன்னிலை வகித்து வருகின்றன என்பது தொடர்பாக நிறைய கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது ஏபிபி சி வோட்டர் கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது.
இதன் கணிப்புபடி தமிழகத்தில் திமுக இந்திய கூட்டணி 39 (52%), பாஜக கூட்டணி – 00 (19%), அதிமுக – 00(23%) வெற்றி பெறும் என்று கூறியுள்ளது. அதன்படி திமுக தமிழகத்தில் உள்ள 39 இடங்களில் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் என்று ஏபிபி சி வோட்டர் சர்வே கூறியுள்ளது. அப்படி எனில் அதிமுக வசம் இருக்கும் ஒரு தொகுதியான தேனியும் திமுக பக்கம் செல்லும் என்று கூறப்பட்டுள்ளது.
அந்த வகையில் திமுக தமிழ்நாட்டில் 52% வரை வாக்குப்பதிவு பெறும் என்று கருத்து கணிப்பில் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து அதிமுக 00(23%), பாஜக 00(19%) வாக்குப்பதிவை பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் திமுகவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் அதிமுக உள்ளது. அப்படி எனில் தமிழகத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக தொடரப்போவது அதிமுக தான் என்பது உறுதியாகியுள்ளது.
பாஜக வழக்கம்போல் டெபாசிட் இழக்கும் என்றே தெரிகிறது. ஏனெனில் முன்பு வரை தமிழ்நாட்டில் பாஜக 2-10 இடங்கள் வரை வெல்லும் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போது தேர்தல் நெருங்கி விட்ட சமயத்தில் அனைத்து இடங்களிலும் திமுக தான் ஜெயிக்கும் என்று கருத்து கணிப்புகள் வெளியாகி இருப்பது பாஜக வேட்பாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.