கேரளாவில் முஸ்லீம்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று ரம்ஜான் வாழ்த்து சொல்ல பா.ஜனதாவினர் முடிவு!

Photo of author

By Savitha

கேரளாவில் முஸ்லீம்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று ரம்ஜான் வாழ்த்து சொல்ல பா.ஜனதாவினர் முடிவு!

Savitha

கேரளாவில் முஸ்லீம்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று ரம்ஜான் வாழ்த்து சொல்ல பா.ஜனதாவினர் முடிவு.

கிறிஸ்தவ மக்களிடையே ஒரு தொடர்பை ஏற்படுத்தி அவர்கள் மனதில் இடம் பிடிக்கும் வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் தினத்தையொட்டி கேரள மாநில பாரதிய ஜனதா தலைவர்கள், நிர்வாகிகள், பிஷப்புகள் மற்றும் கிறிஸ்தவர்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

சினேக யாத்திரை என்ற பெயரில் நடந்த இந்த முயற்சிக்கு கிறிஸ்தவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததாக பாரதிய ஜனதாவினர் தெரிவித்தனர்.இதன் தொடர்ச்சியாக அடுத்தவாரம் 22-ந்தேதி கொண்டாடப்படும் ரம்ஜான் பண்டிகையையொட்டி பாரதிய ஜனதாவினர் முஸ்லீம்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று அவர்களுக்கு ரம்ஜான் வாழ்த்து தெரிவிக்க முடிவு செய்து உள்ளனர்.

கொச்சியில் நடந்த பாரதிய ஜனதா கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது