இந்த விஷயத்தில் இவர்கள் தான் டாப்! மலைத்துப் போன எதிர்க்கட்சிகள்!

0
62

அரசியல் வாழ்க்கை என்பது பொது வாழ்க்கை தான் அதில் எந்த ஒரு மாற்றமும் கிடையாது. ஆனால் அதற்கேற்றவாறு அரசியல் கட்சியும் வேண்டும் அந்த அரசியல் கட்சியை நடத்தவும், அதில் இருக்கும் நிர்வாகிகளை மகிழ்விக்கவும், நிதி தேவை இந்த நிதி இல்லாமல் எந்த ஒரு விஷயமும் சாத்தியமாகாது என்பதுதான் உண்மை நிதி இல்லாவிட்டால் கட்சிகளின் தேர்தல் வரைமுறையும் மாறும் அந்த அளவிற்கு பணம் அரசியலோடு ஒன்றிணைந்து இருந்து வருகிறது.

இதன் காரணமாகவே, பல கட்சிகளும் நிறுவனம் ஆகி இருக்கிறது. அதற்கு காரணம் என்ன என்பது ஒருபுறம் இருந்தாலும் இந்த நிதியை கட்சிகள் எவ்வாறு வாங்குகின்றன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அரசியலில் கிட்டத்தட்ட ஐம்பது, அறுபது ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்சிகளும் நேற்று ஆரம்பித்த புது கட்சிகளும் நிதி திரட்ட தொடங்குவார்கள். அது எப்படி என்றால் கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் உள்ளிட்டோர் இடம் நன்கொடை வாங்குவார்கள். பொதுமக்களிடம் கூட நிதி கேட்பார்கள். சிலர் மனம் வந்து கொடுப்பார்கள் பலர் வற்புறுத்தப்பட்டு கொடுப்பார்கள். ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்களும் தங்களது அரசாங்கத் தரப்பில் ஏதேனும் காரியமாக வேண்டியிருந்தால் நிதியை கணக்கே இல்லாமல் கொடுத்து விடுவார்கள்.

எப்போதும் நன்கொடை பெறும் விஷயத்தில் ஆளும் கட்சியின் தந்திரமே அதிக அளவில் வேலை செய்யும். அதேநேரம் எதிர்க்கட்சிகளுக்கும் எந்தவிதமான சிக்கலும் இல்லாமல் நன்கொடைகள் வந்து சேரும். ஏனென்றால் திடீரென்று ஆட்சி மாற்றம் நிகழ்ந்து விட்டால் எந்த ஒரு சிக்கலும் வராமல் இருக்க வேண்டும் அல்லவா இதிலிருந்து கார்ப்பரேட் கம்பெனிகளின் ராஜதந்திரத்தை நாம் புரிந்துகொள்ள இயலும். இப்போது எதிர்க்கட்சியாக இருக்கும் கட்சி நாளை ஆட்சிக்கு வந்துவிட்டால் அந்த கட்சிக்கு நிதி குவிய தொடங்கி விடும்.

அந்த விதத்தில் கடந்த 7 வருட காலமாக பாரதிய ஜனதா கட்சிக்கு கிடைத்த நிதி அனைவரையும் வாய் பிளக்க வைக்கிறது. அதற்கு எதிர்மறையாக எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சியின் நிதி அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது .2020 ஆம் ஆண்டின் முடிவில் பாரதிய ஜனதா கட்சியின் வாங்கி இருப்பு 2253 கோடி அதுவே காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கின் இருப்புத் தொகை 178 கோடி. தற்போது இவ்வளவு நிதி கிடைத்தது என்றால் ஆட்சி முடிவதற்கு இன்னும் மூன்று வருடங்கள் இருக்கின்றன. அவ்வாறு முடிவடையும் சமயத்தில் நாம் யாரும் நினைத்துக்கூட பார்க்காத அளவிற்கு பாரதிய ஜனதா கட்சியின் வங்கி கணக்கில் பணம் இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.