இளைஞர்களின் விரல்களை வெட்டி எதிர்காலத்தை பா.ஜ., அழித்து வருகிறது!! ராகுல் காந்தி குற்றசாட்டு!!

0
81
BJP is destroying the future by cutting the fingers of the youth!! Accusation of Rahul Gandhi!!
BJP is destroying the future by cutting the fingers of the youth!! Accusation of Rahul Gandhi!!

புதுடெல்லி: தற்போது உள்ள காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அவர்கள் அரசு பணிக்கான தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் மூலம் இளைஞர்களின் நம்பிக்கையை உடைத்துவிட்டது, பாஜக அரசு. இந்த சம்பவத்திற்கு ராகுல் காந்தி அவர்கள் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

ஏகலைவனைப் போல், இளைஞர்களின் விரல்களை வெட்டி, அவர்களின் எதிர்காலத்தை பா.ஜ., அழித்து வருகிறது. அரசு பணிகளுக்கு ஆட்களை எடுப்பதில் தோல்வி என்பது மிகப்பெரிய அநீதி. முதலில், பணி நியமனம் தொடர்பான அறிவிப்பு முறையாக வெளியிடப்படவில்லை. அப்படி அறிவிக்கப்பட்டாலும், தேர்வு முறையாக நடத்தவில்லை. அப்படி நடந்த தேர்விற்கு முன்னதாக, வினாத்தாள் கசிந்தது. நீதி கேட்டு போராடிய இளைஞர்களின் குரல்கள் கொடூரமாக ஒடுக்கப்பட்டது.

உ.பி., மற்றும் பீஹாரில் நடந்த வினாத்தாள் கசிவு சம்பவத்தைத் தொடர்ந்து ம.பி., மாநிலத்திலும் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடிய இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அந்த மாணவர்களை சந்தித்த முதல்வர், உங்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதி அளித்த போதும் இது நடந்துள்ளது. இளைஞர்களின் நம்பிக்கையை உடைத்த பாஜக அரசு, ஜனநாயக அமைப்பை கொன்று விட்டது. என இந்த அறிக்கையில் கூறினார்.

Previous articleஇந்திய அணியின் கதை முடிந்தது.. உலக டெஸ்ட் கோப்பை யை இழப்பது உறுதி!! தடுமாறும் இந்திய பேட்ஸ்மேன்கள்!!
Next articleஇந்திய அணியில் ரீ என்ட்ரி.. சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு டிக்கெட் போடுங்க!! சதம் விளாசி அதிரடி ஆட்டம்!!