வீட்டு உபயோக சிலண்டரின் விலை ஆனது 50 ரூபாய் உயர்த்தப்பட்டு இருப்பது குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் கண்டனம் தெரிவித்து தன்னுடைய பதிவை வெளியிட்டு இருக்கிறார். இதில் தேர்தல் நெருங்குவதால் மத்திய அரசு நாடகமாடுவதாகவும் உடனடியாக உயர்த்தப்பட்ட சிலிண்டர் விலையை திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார்.
முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் பதிவில் தெரிவித்து இருக்க கூடியது :-
நாட்டு மக்களின் வீட்டில் அடுப்பு எறிய வேண்டுமே தவிர அவர்களினுடைய வயிற்றில் நெருப்பு எரியக் கூடாது என்றும் உதவி செய்யவில்லை என்றாலும் உபத்திரவம் செய்யாமல் இருத்தல் வேண்டும் என்ற பழமொழி பாஜகவில் இருக்கக்கூடியவர்களுக்கு பொருந்தும் என குறிப்பிட்டிருக்கிறார்.
2024 மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களின் விலையானது 918 ரூபாயிலிருந்து 100 ரூபாய் குறைக்கப்பட்டு 818 ரூபாயாக வழங்கப்பட்டு வந்தது. வர்த்தக சிலிண்டரின் விலையானது ஒவ்வொரு மாதமும் அதிகரித்த பொழுதிலும் வீட்டு உபயோக சிலிண்டர் இன் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமலே இருந்து வந்தது. ஆனால் இப்பொழுது தேர்தல் நெருங்கக் கூடிய சமயத்தில் திடீரென 50 ரூபாய் வீட்டு எரிவாயு சிலிண்டர்கள் உயர்த்தப்பட்டு இருப்பது கண்டனத்திற்குரிய விஷயம் என்றும் தேர்தல் நெருங்கும் சமயத்தில் சிலிண்டர் விலையை குறைப்பது போல குறைத்து நற்பெயர் பெற்றுக் கொள்வதற்காக பாஜகவினர் இதை செய்வதாகவும் முதலமைச்சர். மு க ஸ்டாலின் குற்றம் சாட்டியிருக்கிறார்.
உடனடியாக வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் அதிகரிக்கப்பட்ட விலையை திரும்ப பெற வேண்டும் என்றும் தேர்தல் நெருங்கும் வரை காத்திருக்க வேண்டாம் என்றும் கோரிக்கை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.