மறைந்த முதல்வரை டார்கெட் செய்யும் பாஜக!! வேறு வழியே இல்லை இதுதான் கடைசி வாய்ப்பு!!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதால் இரு கட்சியினிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிய நேரிட்டது. நாடாளுமன்ற தேர்தலிலும் அதிமுகவுடன் உடன்பாடு ஏற்படாமல் தனித்தே நின்றது. அதிமுக கூட்டணி இல்லாததால் பாஜக பல இடங்களில் டெபாசிட் இழக்கும் என்று அரசியல் வட்டாரங்களில் பலரும் பேசி வந்தனர்.
இதற்கெல்லாம் முக்கிய காரணம் அண்ணாமலை தான் என்று சுட்டிக்காட்டினர். தற்பொழுது ஜூன் நான்காம் தேதி நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் பாஜக அண்ணாமலை இன்று நிர்வாகிகள் மத்தியில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினார். அதில் அவர், பாஜக நிர்வாகிகள் அனைவரும் வெற்றியை கொண்டாட தயாராக இருங்கள். பாஜக மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பது என்பது காலத்தின் கட்டாயம் என தெரிவித்தார்.
அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களை குறித்து அவதூறாக பேசிய அண்ணாமலை குறுகிய காலத்தில் அவரை தன் சார்ந்த அமைப்பாளராக மாற்றி பேச ஆரம்பித்தார். அண்ணாமலை மட்டுமின்றி பிரதமரும் அவ்வாறே பேசி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நடந்த ஒரு கூட்டம் ஒன்றில் தமிழ்நாட்டில் எம்ஜிஆரை அடுத்து யாரேனும் நல்ல தலைவர் நல்லாட்சி நடத்தியுள்ளார் என்றால் அது அம்மா மட்டும்தான் என மோடி புகழாரம் சூட்டியது குறிப்பிடத்தக்கது.
அதேபோல அண்ணாமலையும் ஒரு சில வாரங்களுக்கு முன்பு, ஜெயலலிதா அவர்கள் தன்னுடைய இந்துத்துவத்தை முழுமையாக வெளிக்காட்டினார் இதனால் பலரது ஓட்டுக்களை கவர்ந்தார். ஆனால் அவர் மறைவிற்குப் பிறகு அதன் வெளிப்பாடு முழுமையாக இல்லாததால் பல ஓட்டுக்கள் விழாமல் போனது. அதன் வெற்றிடத்தை தற்பொழுது பாஜக தான் நிரப்புவதாக தெரிவித்திருந்தார். இதனை அதிமுக உட்பட பலரும் எதிர்த்து கண்டனம் தெரிவித்தனர்.
அதனைத்தொடர்ந்து இன்றும், அம்மா ஒரு தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், சட்ட ஒழுங்கு பிரச்சனை என்பது ஹிந்து மற்றும் முஸ்லீம் இடையே காணப்படும் வேறுபாடு. ஆனால் தமிழகத்தில் தான் நாட்டிற்கு எதிரானவற்கும் நாட்டிற்கு ஆதரவானவற்கும் உள்ள மோதலாக உள்ளது. அதனை முழுமையாக எதிர்ப்பேன் என்று கூறியதை சுட்டிக்காட்டி பேசினார்.
சமீப காலமாக பாஜக-வானது, மறைத்த முதல்வர் ஜெயலலிதா அவர்களை குறிவைத்தே பேசி வருகின்றது. இவ்வாறு பேசுவதன் மூலம் அம்மா பேசிய அனைத்தும் எங்கள் கருத்துடன் ஒத்துப்போகும் என கூறுவது போல உள்ளது.இதன் மூலம் அம்மா என்ற அடையாளத்தை பாஜக தனக்கு சொந்தமாக்க நினைக்கிறது.