போலீசாரிடம் வசமாக சிக்கிய பாஜக முக்கிய புள்ளிகள்! வில்லங்கமாக மாறிய சமூகவலைத்தள பதிவு!
வரும் நாட்களில் பாஜக மீது தொடர் புகார்கள் எழுந்த வண்ணமே உள்ளது. பிரதமர் மோடி அவர்கள் பஞ்சாபிற்கு சென்றபோது போராட்ட கலவரம் வெடிக்க தொடங்கியது. அவரை திட்டத்தை தொடங்க விடாமல் பல போராட்டக்காரர்கள் அவர் காரை சுற்றி முற்றுகையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவே இன்றுவரை பஞ்சாப் அரசு தெளிவான விளக்கம் அளிக்கவில்லை என பலர் கேள்விகள் எழுப்பி வருகின்றனர். ஒருபக்கம் விவசாயிகளுக்கு பிரதமர் மோடி செய்த செயலால் தான் இந்த பின்விளைவுகள் என்றும் கூறி வருகின்றனர்.
இவ்வாறு இருக்கையில் அக்கட்சி உறுப்பினர்கள் மீது தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணமே உள்ளது. அத்தோடு சில தினங்களுக்கு முன்பு சட்டமன்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தன்னுடன் கூட்டணி வைத்துக் கொண்ட அதிமுகவை பற்றியே வன்மையாக பேசினார். சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேசும் அளவிற்கு எந்த ஒரு அதிமுக உறுப்பினர்களும் இல்லை என அவர் கூறினார். இவ்வாறு அவர் கூறியது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. தன்னுடன் கூட்டணி வைத்தவர்களில் இவ்வாறு இழிவாக பேசியது கட்சிக்குள்ளேயே பிளவு ஏற்படுவது போல் ஆனது. இவ்வாறு இருக்கையில் பல பாஜக உறுப்பினர்கள் சமூக வலைத்தளங்களில் மக்களின் அமைதியை கெடுக்கும் வகையில் பல பதிவுகளை பதிவிட்டு வந்தனர்.
இவ்வாறு மதத்தின் அடிப்படையிலோ அல்லது மக்கள் முன்னிலையில் மதத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு பகைமையை வளர்த்து விடும் வகையிலோ சமூக வலைத்தளங்களில் ஏதேனும் கருத்துக்களை பதிவிடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறினார். அந்தவகையில் மக்களை பகடைக்காயாக பயன்படுத்தி மத கலவரத்தை தூண்டும் வகையில் பாஜக செயற்குழு உறுப்பினர் கௌந்தமணி என்பவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பல வீடியோக்களை பதிவிட்டுள்ளார். இவ்வாறு சவுதா மணி மக்களிடையே மத கலவரத்தை தூண்டும் வகையில் பதிவிட்டுள்ள பதிவுகளை எதிர்த்து பல புகார்கள் வந்தது.
அந்தப் புகார்கள் இன் கீழ் பாஜக செயற்குழு உறுப்பினர் சவுத்ரி என்பவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவரைப்போலவே பாஜக நிர்வாகி வினோஜ் என்பவர் டிசம்பர் மாதம் இருபத்தி எட்டாம் தேதி மதக்கலவரத்தை தூண்டும் வகையில் சமூக வலைத்தளத்தில் தனது கருத்தை பதிவிட்டால் அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இவ்வாறான புகார்கள் பாஜகவினரை பின்னடைவை சந்திக்க வைக்கும்.