நீங்கள் சொல்வது நடப்பதேயில்லை! மாவட்ட செயலாளர்களிடம் சீரிய முதலமைச்சர் ஸ்டாலின்!

0
66

ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் இருக்கின்ற 21 மாநகராட்சிகள். 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு ஒரே கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

அதோடு வரும் பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது மார்ச் மாதம் 4ம் தேதி மாநகராட்சிக்கான மேயர், நகராட்சி சேர்மன், உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெறும் என்றும்,அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில், சென்ற ஜனவரி மாதம் 27ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலிக் காட்சியின் மூலமாக நடந்தது.

அதோடு மட்டுமல்லாமல் அந்தக் கூட்டத்தில் கூட்டணி கட்சிகளுக்கு எந்தவிதமான தடையும் இல்லாமல் போதுமான அளவில் இடங்களை ஒதுக்க வேண்டும். கூட்டணிக் கட்சியின் உள்ளூர் நிர்வாகிகளுக்கு எந்தவிதமான நெருடல்களும் உண்டாகாத விதத்தில் கட்சியினரின் அணுகுமுறை அவசியம் இருக்க வேண்டும். கூட்டணிக் கட்சிகளுடனான நட்பு தொடர வேண்டும் என்றும், அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

கூட்டணி கட்சியை சார்ந்தவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்த பிறகு திமுக போட்டியிடயிருக்கின்ற இடங்களுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும். இந்த தேர்வு ராணுவ வீரர்கள் தேர்வு செய்வதை போல நெறிமுறைகளுடன் நடைபெற வேண்டும் என கடிதம் எழுதியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

காணொளியின் மூலமாக நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு கட்டளைகளை மாவட்ட செயலாளர்களுக்கு மிகவும் கடுமையாக விதித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என சொல்லப்படுகிறது.

இதுதொடர்பாக திமுகவின் வட்டாரத்தில் விசாரணை செய்தபோது தேர்தல் நடைபெறும் அனைத்து இடத்திலும் திமுகவின் வெற்றி வாய்ப்பு எவ்வாறு இருக்கிறது என்று உளவுத்துறை வழங்கிய அறிக்கை என்னிடமிருக்கிறது ஆனால் நீங்கள் எப்பொழுதும் சுலபமாக வெற்றி பெற்றுவிடலாம் என தான் சொல்கிறீர்கள்.

ஆனாலும் அவ்வாறு நடப்பதே இல்லை, அதிலும் குறிப்பாக கொங்கு மண்டலத்தில் வெற்றி வாய்ப்பு மிகவும் குறைவாக இருக்கிறது. அதை நாம் முறியடித்து வெற்றி பெற வேண்டும். இல்லையானால் கட்சியின் அதிரடி நடவடிக்கைக்கு யாராக இருந்தாலும் தயாராக இருக்க வேண்டும் என்று கடுமை காட்டியிருக்கிறாராம் முதலமைச்சர்.

அதேநேரம் பொதுமக்களிடம் நம்முடைய அரசின் மீது எந்தவிதமான குறையுமில்லை அதை நாம் பொது மக்களிடம் எடுத்துக்கூறி பிரச்சாரம் செய்ய வேண்டும். என்று முதலமைச்சர் ஸ்டாலின் மிகவும் கறாராக கட்சியினருக்கு உத்தரவிட்டிருக்கிறாராம்.

அதே போன்று கூட்டணி கட்சியை சார்ந்தவர்களை நன்றாக கலந்தாலோசித்து இடங்களை தேர்வு செய்ய வேண்டும், மொத்தத்தில் நம்முடைய கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்றும், முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருப்பதாக சொல்லப்படுகிறது.