அவர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள்! முக்கிய கட்சியைச் சாடிய எல். முருகன்!

Photo of author

By Sakthi

விருதுநகரில் நடந்த பாதுகாப்பு கமிட்டி விழாவில் நடந்த கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் பங்கேற்றார். அந்த நிகழ்வின் போது உரையாற்றிய அவர் மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் திட்டங்களால் தமிழர்கள்தான் அதிக பயன் அடைந்திருக்கிறார்கள் 50 வருடங்களாக தேவேந்திரகுல வேளாளர் கோரிக்கையை வேறு யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி அந்த கோரிக்கையை பாராளுமன்றத்திற்கு கொண்டு சென்று இருக்கின்றார். 2012ஆம் வருடம் மதுரையில் நடந்த மாநாட்டில் அந்த சமூகத்தை பற்றிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல 2015 ஆம் வருடம் தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அந்த கோரிக்கை தொடர்பாக கேட்டறிந்து இருக்கின்றார் என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியும் திமுகவும் இலங்கை தமிழர்களுக்கு துரோகம் செய்து இருப்பதாக குற்றம் சாட்டிய முருகன், தமிழ் நாடு முன்னேற கூடாது என்று நினைக்கும் ஒரே கட்சி திமுக மட்டும்தான் என்றும் தெரிவித்தார். தமிழ்நாட்டிற்கு மற்றும் தமிழ் கலாச்சாரத்திற்கு, தமிழ் பண்பாட்டிற்கு மற்றும் தமிழ் கடவுள்களுக்கு என்று அனைத்திற்கும் எதிராக இருப்பவர்கள் திமுகவை சேர்ந்தவர்கள் என்று மிகக் கடுமையாக குற்றம் சாட்டினார்.

பாஜகவின் வேல் யாத்திரை தொடங்கிய இடத்தில் தான் ஸ்டாலின் தன்னுடைய கையில் வேலை தூக்கி இருக்கின்றார் எனவும், ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இருவரும் அதோடு திமுகவினரும் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்றும் தெரிவித்திருக்கிறார்.