உத்திரபிரதேச மாநிலத்தில் மாவட்டத்தின் தலைவராக இருக்கின்ற பாஜகவை சேர்ந்த சஞ்சய் ஜெய்ஸ்வாலுக்கு 10 வயதில் ஆனந்த் என்ற மகன் இருக்கிறார். ஆனந்த் அந்தப் பகுதியில் இருக்கின்ற சிறுவர்களுடன் திருடன், போலீஸ் விளையாட்டு விளையாடியதாக தெரிகிறது.
இதில் ஆனந்துக்கு போலீஸ் பாத்திரம் வழங்கப்பட்டது. உடனடியாக தன்னுடைய தந்தை வைத்திருந்த உரிமம் பெற்ற துப்பாக்கியை விளையாட்டு துப்பாக்கி என நினைத்து அதனை எடுத்து வந்து விளையாடியதாக சொல்லப்படுகிறது.
அந்த சமயத்தில் விளையாட்டு துப்பாக்கியில் சுடுவதைப் போல வேதாந்த் என்ற சிறுவனை நோக்கி ஆனந்த் சுட்டார். அப்போது துப்பாக்கியில் இருந்து குண்டு புறப்பட்டு சிறுவன் வேதாந்தின் மார்பின் மேல் பாய்ந்தது.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அந்த சிறுவனை அங்கு இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட சூழ்நிலையில், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.