தூக்கில் தொங்கிய பாஜக எம்எல்ஏ; அடித்துக் கொன்றதாக குற்றச்சாட்டு! பரபரப்பு சம்பவம்

Photo of author

By Jayachandiran

தூக்கில் தொங்கிய பாஜக எம்எல்ஏ; அடித்துக் கொன்றதாக குற்றச்சாட்டு! பரபரப்பு சம்பவம்

Jayachandiran

மேற்கு வங்காளம் தினஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த தேபேந்திரநாத் ராய், இவர் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஹேமதாபாத் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன்பின்னர் கடந்த ஆண்டு மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இந்த சம்பவம் அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

இந்நிலையில் இன்று காலை அவரது வீட்டின் முன்பு தேபேந்திரநாத் உடல் கயிற்றில் தொங்கவிடப்பட்டு உயிரிழந்த நிலையில் கிடந்தார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றினர். தேபேந்திரநாத் மர்ம நபர்களால் அடித்துக் கொல்லப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டதாக அம்மாநில பாஜகவினர் குற்றம்சாட்டியதோடு, எங்கள் கட்சியில் அவர் இணைந்தது குற்றமா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.


இச்சம்பவத்தை கொண்டு மம்தா பானர்ஜி அரசு தோல்வி அடைந்துவிட்டதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தனது ட்விட்டர் மூலம் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரு தேசிய கட்சியின் எம்எல்ஏ இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.