விரைவில்‘தாஜ்மஹால்’ பெயர் ‘ராம் மஹால்’ என மாற்றப்படும்… உ.பி. பாஜக எம்.எல்.ஏ. பேச்சால் சர்ச்சை…!

Photo of author

By CineDesk

அரசியல் கட்சியினர் பலரும் சர்ச்சையை கிளம்பும் விதமாக பேசுவது வழக்கமானது தான் என்றாலும், பாஜகவைச் சேர்ந்த நிர்வாகிகள் பேசுவதோ சர்ச்சையின் உச்சமாக மட்டுமே உள்ளது. அப்படி உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவர் உலக அதிசயங்களில் ஒன்றாக போற்றப்படும் தாஜ்மஹால் குறித்து பேசிய கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.

முகலாய மன்னரான ஷாஜஹான் தன்னுடைய காதல் மனைவி மும்தாஜ் நினைவாக கட்டிய கல்லறை தான் தாஜ் மஹால். 1632ம் ஆண்டு தொடங்கப்பட்ட கட்டுமான பணி 21 ஆண்டுகள் கழித்து தான் நிறைவடைந்து. காரணம் வெள்ளை பளிக்கு கற்களைக் கொண்டு அந்த காலத்தில் எவ்வித நவீன தொழில்நுட்பமும் இன்றி தாஜ் மஹால் என்ற அழகிய அதிசயம் வடிவமைக்கப்பட்டது.

Taj mahal

இந்த நிலையில் உலகப் புகழ் பெற்ற தாஜ் மஹாலின் பெயர் ராம் மஹால் என மாற்றம் செய்யப்படும் உ.பி.பாஜக எம்.எல்.ஏ. சுரேந்திர சிங் பேசியுள்ளது பிரச்சனையை கிளறியுள்ளது. உத்தரபிரதேசத்தின் பல்லியா மாவட்டத்தில் உள்ள பைரியா தொகுதியைச் சேர்ந்தவர் பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ. சுரேந்திர சிங் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ஆக்ராவின் தாஜ் மஹால் அமைந்துள்ள இடத்தில் சிவபெருமானின் ஆலயம் இருந்தது. அதனால் உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆட்சியில் தாஜ் மஹால் பெயரை ராம் மஹால் என மாற்றப்படும் என உறுதி அளித்துள்ளார்.

மேலும் முகலாய மன்னர்களால் இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட சாலைகள், வரலாற்று சின்னங்களின் பெயர்களையும் மாற்றி அமைக்க வேண்டும் என மத பிரச்சனையை தூண்டும் விதமாக பேசி சர்ச்சையை பெரிதுபடுத்தியுள்ளார்.